கோவையில் 12 வயது சிறுமிக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை; சிறுவன் உள்பட 3 பேர் கைது

By Velmurugan s  |  First Published Mar 23, 2023, 10:57 AM IST

கோவையில் 12 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 3 பேரை பேரூர் அனைத்து மகளிர் காவல் துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.


 கோவையை சேர்ந்த 12 வயது சிறுமியின் தந்தை வீட்டை விட்டு வெளியேறிய நிலையில் மனநலம் பாதிக்கப்பட்ட தாயுடன் அப்பகுதியில் வசித்து வந்துள்ளார். மேலும் அரசு பள்ளியில் படித்து வருகிறார் சிறுமி. இந்நிலையில் சிறுமி படித்து வரும் அரசு பள்ளியில் சைடு லைன் சார்பில் போக்சோ குறித்தான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. 

இதில் சிறுமிகள் பாலியல் ரீதியான தாக்குதலுக்கு உட்பட்டால் தயங்காமல் தனியாக வந்து புகார் தெரிவிக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். இதனைத் தொடர்ந்து அந்த சிறுமி அதிகாரிகளிடம் தனக்கு நடந்த பாலியல் துன்புறுத்தல் குறித்து தெரிவித்துள்ளார். அதில் சிறுமி வீட்டின் அருகே வசித்து வரும் மதன்(வயது 24) என்பவர் அவரது மனைவி சண்டையிட்டு வெளியே சென்ற போது வெளியே விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை வீட்டுக்குள் அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

Tap to resize

Latest Videos

இது குறித்து வெளியே சொல்லக்கூடாது எனவும் மிரட்டியதாக கூறப்படுகிறது. அதேபோல் வீட்டின் அருகே பெட்டிக்கடை வைத்திருக்கும்(17) சிறுவனும் சிறுமி கடைக்கு வரும்பொழுது பேசி பழகி அடிக்கடி பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளதாகவும் அப்பெண் தெரிவித்துள்ளார். அதேபோல் சிறுமியின் தந்தையின் நண்பரான சதாசிவம்(48) சிறுமியை பள்ளிக்கு அழைத்துச் செல்லும்போது பாலியல் சீண்டல் செய்துள்ளார். 

ஓசூரில் படுஜோராக அரங்கேரிய விபசாரம்; 3 பெண்கள் மீட்பு - ஓட்டல் உரிமையாளர் கைது

இதனை அதிகாரியிடம் சிறுமி தெரிவித்துள்ளார். இதை தொடர்ந்து சைடு லைன் அதிகாரிகள் பேரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த பேரூர் காவல்துறையினர் மதன், 17 வயது சிறுவன் மற்றும் சதாசிவம் ஆகிய மூன்று பேரையும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் 17 வயது சிறுவனை சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர்.

ராங் கால் மூலம் இளைஞனை மயக்கி கத்தி முனையில் பணம் பறிப்பு; திண்டுக்கல்லில் துணீகரம்

மேலும் இது தொடர்பாக காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

click me!