சந்தேகத்தால் சீரழிந்த குடும்பம்..! மனைவியை ஆத்திரம் தீர அடித்துக்கொன்ற கொடூர கணவர்..!

Published : Mar 10, 2020, 11:49 AM IST
சந்தேகத்தால் சீரழிந்த குடும்பம்..! மனைவியை ஆத்திரம் தீர அடித்துக்கொன்ற கொடூர கணவர்..!

சுருக்கம்

நேற்று இரவு வேலை முடிந்து வீட்டில் இருந்த பரமானந்தனுக்கும் அவரது மனைவிக்கும் மீண்டும் சண்டை ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றி ஆத்திரமடைந்த பரமானந்தன் வீட்டில் கிடந்த கட்டையை எடுத்து மனைவியை சரமாரியாக அடித்து தாக்கியிருக்கிறார். இதில் பலத்த காயமடைந்த மயிலாத்தாள் சரிந்து விழுந்தார்.

நாமக்கல் மாவட்டம் பெரியபட்டியைச் சேர்ந்தவர் பரமானந்தன்(60). இவரது முதல் மனைவி இறந்து விடவே மயிலாத்தாள்(49) என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். பரமானந்தன் லாரி ஓட்டுநராக தொழில் பார்த்து வந்தார். கணவன் மனைவி இடையே குடும்ப பிரச்சனைகள் காரணமாக அடிக்கடி தகராறு இருந்து வந்துள்ளது.

நேற்று இரவு வேலை முடிந்து வீட்டில் இருந்த பரமானந்தனுக்கும் அவரது மனைவிக்கும் மீண்டும் சண்டை ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றி ஆத்திரமடைந்த பரமானந்தன் வீட்டில் கிடந்த கட்டையை எடுத்து மனைவியை சரமாரியாக அடித்து தாக்கியிருக்கிறார். இதில் பலத்த காயமடைந்த மயிலாத்தாள் சரிந்து விழுந்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சியடைந்து மயிலாத்தாளை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

6ம் வகுப்பு மாணவியை மாறி மாறி கற்பழித்த கொடூரர்கள்..! ஆற்றுப்பகுதியில் ஆடைகளை அவிழ்த்து அட்டூழியம்..!

அங்கு மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் இருந்த மயிலாத்தாள் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டு மயிலாத்தாளின் உடல் பிரேத பரிசோதனைக்கு கொண்டு செல்லப்பட்டது. வழக்கு பதிவு செய்த காவலர்கள் பரமாநந்தனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மனைவி மீது ஏற்பட்ட சந்தேகம் காரணமாகவே பரமானந்தன் கொலை செய்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

பாஜக சொல்றத கேட்குறதுக்கு நாங்க குழந்தைங்க இல்ல..! திமிறி எழுந்த ஜெயக்குமார்..!

PREV
click me!

Recommended Stories

பள்ளி, கல்லூரி மாணவிகளை ஒரே நேரத்தில் கரெக்ட் செய்த இளைஞர்! கை குழந்தைகளுடன் 2 பேரும் கதறல்! இறுதியில் நடந்த ட்விஸ்ட்!
இதற்காக தான் கார் டிரைவர் ஹரீஷை கூலிப்படை ஏவி கொன்றேன்! மஞ்சுளாவின் சினிமாவை மிஞ்சிய பரபரப்பு வாக்குமூலம்!