50 ரூபாய்க்கு ஆபாச படங்களை சப்ளை செய்த வாலிபர்கள்..! போக்சோவில் அதிரடி கைது..!

Published : Mar 09, 2020, 06:01 PM ISTUpdated : Mar 09, 2020, 06:03 PM IST
50 ரூபாய்க்கு ஆபாச படங்களை சப்ளை செய்த வாலிபர்கள்..! போக்சோவில் அதிரடி கைது..!

சுருக்கம்

கமுதி பஸ் நிலையம் அருகில் உள்ள ஒரு கடையில் கணினியில் குழந்தைகளின் ஆபாச வீடியோக்களை பதிவிறக்கம் செய்து அதை பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பென்டிரைவ் மற்றும் மெமரி கார்டுகளில் பதிவேற்றம் செய்து கொடுத்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதற்கு கட்டணமாக ரூ.50 வசூல் செய்துள்ளனர்.

சமீபத்தில் அமெரிக்காவின் புலனாய்வு பிரிவு ஆபாச படம் பார்ப்பவர்களை பற்றிய ஆய்வுகளை மேற்கொண்டது. அதில் உலகளவில் இந்தியாவில் தான் ஆபாச படம் பார்ப்பவர்களின் எண்ணிக்கை அதிகளவில் இருப்பதாக தெரிய வந்துள்ளது. இந்தியாவிலேயே தமிழகம் தான் அந்த எண்ணிக்கையில் முதலிடம் வகிக்கிறது. அதிலும் அதிர்ச்சி தரக்கூடிய செய்தி, தமிழகத்தில் சென்னையில் தான் அதிகளவிலானோர் ஆபாச படம் பார்ப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

தமிழகத்தில் ஆபாச படம் பார்ப்பவர்களில் பெரும்பான்மையானவர்கள் குழந்தைகள் சம்பந்தமான படங்களை தேடி, தரவிறக்கம் செய்வதாகவும் ஆய்வில் கூறப்பட்டுள்ளது. இந்த ஆய்வின் அறிக்கையை பார்த்து அதிர்ச்சியடைந்த மத்திய உள்துறை அமைச்சகம், அதை தமிழக காவல்துறைக்கு அனுப்பி உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது. அதனடிப்படையில் தமிழக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றப்பிரிவு காவலர்கள் நடவடிக்கையில் இறங்கினர். தமிழகத்தின் திருச்சி,கோவை,சென்னை, கரூர் உட்பட பலநகரங்களில் இருந்து ஏரளாமானோர் அதிரடியாக கைதாகினர்.

நள்ளிரவில் கதவை தட்டி உல்லாசத்திற்கு அழைத்த வாலிபர்..! அதிர்ச்சியில் அலறிய இளம்பெண்..!

இந்த நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் கமுதி பகுதியில் பள்ளி,கல்லூரி மாணவர்களுக்கு ஆபாச படம் பரப்படுவதாக காவல்துறைக்கு தகவல் வந்தது. அதனடிப்பையில் காவலர்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். கமுதி பஸ் நிலையம் அருகில் உள்ள ஒரு கடையில் கணினியில் குழந்தைகளின் ஆபாச வீடியோக்களை பதிவிறக்கம் செய்து அதை பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பென்டிரைவ் மற்றும் மெமரி கார்டுகளில் பதிவேற்றம் செய்து கொடுத்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதற்கு கட்டணமாக ரூ.50 வசூல் செய்துள்ளனர். இதையடுத்து பொன்னிருள், வழிவிட்டாகிழவன் என இரண்டு பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். போக்சோவில் வழக்கு பதியப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

6ம் வகுப்பு மாணவியை மாறி மாறி கற்பழித்த கொடூரர்கள்..! ஆற்றுப்பகுதியில் ஆடைகளை அவிழ்த்து அட்டூழியம்..!

PREV
click me!

Recommended Stories

பள்ளி, கல்லூரி மாணவிகளை ஒரே நேரத்தில் கரெக்ட் செய்த இளைஞர்! கை குழந்தைகளுடன் 2 பேரும் கதறல்! இறுதியில் நடந்த ட்விஸ்ட்!
இதற்காக தான் கார் டிரைவர் ஹரீஷை கூலிப்படை ஏவி கொன்றேன்! மஞ்சுளாவின் சினிமாவை மிஞ்சிய பரபரப்பு வாக்குமூலம்!