தூத்துக்குடி மாவட்டத்தில் தொழிலில் ஏற்பட்ட நட்டத்தை ஈடுகட்ட சொந்த வீட்டை விற்க வேண்டும் என்று கூறிய அண்ணனை தம்பியே வெட்டி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தூத்துக்குடி அருகே உள்ள சில்லாநத்தம் பகுதியைச் சேர்ந்தவர் நல்ல தம்பி. இவர் இரண்டு லாரி வைத்து தொழில் செய்து வருகிறார். இந்த நிலையில் சுமார் 50 லட்ச ரூபாய் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் கடனை அடைப்பதற்காக தனது பூர்வீக வீட்டை விற்க முடிவு செய்துள்ளார். இதற்கு அவரது தம்பி முத்துராஜ் கடும் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் இன்று அண்ணன் நல்ல தம்பியை தம்பி முத்துராஜ் மற்றும் உறவினர் முத்துராஜ் ஆகியோர் காரில் கிராமத்திற்கு சென்று பேசிக்கொள்ளலாம் என கூறி அழைத்துச் சென்றுள்ளனர். அப்போது இருவருக்கும் தகராறு ஏற்படவே காரில் இருந்த நல்லதம்பி பண்டாரம் பட்டி காட்டுப்பகுதியில் தப்பி ஓட முயன்றுள்ளார். அப்போது விரட்டி சென்ற தம்பி முத்துராஜ் மற்றும் உறவினர் இருவரும் சேர்ந்து தலையில் கம்பியால் கொடூரமாக தாக்கி கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர்.
undefined
Watch : பலாப்பழம் பறித்து தின்ற காட்டுயானை
இது குறித்து தகவல் அறிந்து உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த சிப்காட் காவல் துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில், தப்பி சென்ற தம்பி முத்துராஜ் உறவினரான மற்றொரு முத்துராஜ் ஆகிய இருவரையும் புதிய முத்தூர் காவல் துறையினர் கைது செய்து சிப்காட் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அங்கு காவல் துறையினர் இருவரிடமும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் நல்லதம்பி ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்ததாக கூறப்படுகிறது.