வைர வியாபாரி போல நாடகமாடி ஒரு கோடி ரூபாய் வைரங்களைக் கொள்ளையடித்த 2 பேர் கைது

By SG BalanFirst Published Apr 2, 2023, 10:17 PM IST
Highlights

கண் இமைக்கும் நேரத்தில் வைர வியாபாரியை ஏமாற்றி சுமார் 1.18 கோடி ரூபாய் மதிப்பிலான வைரங்களை அபேஸ் செய்தவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

குஜராத்தைச் சேர்ந்த வைர வியாபாரி ஒருவரிடம் ரூ.1.18 கோடி மோசடி செய்துவிட்டு, பதுங்கியிருந்த இருவரை மும்பை குற்றப்பிரிவு போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர். குற்றம் சாட்டப்பட்ட இருவரும் சூரத் குற்றப்பிரிவு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட இருவர் மும்பையில் இருப்பதைக் கண்டுபிடித்த சூரத் காவல்துறையினர் குஜராத் காவல்துறையைத் தொடர்புகொண்டனர். மும்பை காவல்துறையின் தொழில்நுட்ப நுண்ணறிவுப் பிரிவு, ஒரு குற்றவாளி கண்டிவாலியில் பதுங்கியிருப்பதையும், மற்றவர் மத்திய மும்பையில் உள்ள லால்பாக் என்ற இடத்தில் பதுங்கியிருப்பதையும் கண்டுபிடித்தது.

சீனாவில் காதலில் விழுவதற்கு ஒரு வாரம் விடுமுறை! மக்கள் தொகையை அதிகரிக்க புதிய திட்டம்!

கைதுசெய்யப்பட்ட இருவரும் கடந்த பிப்ரவரியில் வைரங்களை வாங்க ஆர்வம் காட்டுவதாக சூரத்தைச் சேர்ந்த வைர வியாபாரி ஒருவரை அணுகினர். இருவரும் நாசூக்காகப் பேசி, அந்த வைர வியாபாரியிடம் இருந்த அசல் வைரங்களைத் திருடிவிட்டு, அதற்குப் பதிலாக போலி வைரங்களை வைத்துவிட்டு வந்துவிட்டனர்.

இந்த இரண்டு மோசடி ஆசாமிகளும் வெளியேறிய பிறகு, வைரங்களைச் சரிபார்த்த வைர வியாபாரிக்கு அதிர்ச்சி ஏற்பட்டது. அவர் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து உடனடியாக போலீஸை அணுகினார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த சூரத் போலீசார் குற்றவாளிகள் இருவரையும் தேடி வந்தனர். இறுதியில், இருவரும் மும்பையில் இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து சூரத் போலீசார் மும்பை குற்றப்பிரிவு காவல்துறையை தொடர்புகொண்டனர். அவர்கள் குற்றம்சாட்டப்பட்ட இருவரையம் கைது செய்து சூரத் காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.

பாஜக ராம நவமி ஊர்வலத்தில் மீண்டும் வன்முறை: ஹவுராவைத் தொடர்ந்து ஹூக்ளியிலும் பதற்றம்!

click me!