5 லட்சம் சம்பளத்தில் கனடாவில் வேலை.! ஆசை வார்த்தை கூறி இளைஞர்களிடம் மோசடி- மர்ம நபரை தட்டி தூக்கிய போலீஸ்

Published : Apr 02, 2023, 11:30 AM IST
5 லட்சம் சம்பளத்தில் கனடாவில் வேலை.! ஆசை வார்த்தை கூறி இளைஞர்களிடம் மோசடி- மர்ம நபரை தட்டி தூக்கிய போலீஸ்

சுருக்கம்

கனடாவில் 5 லட்சம் ரூபாயில் வேலை வாங்கி தருவதாக கூறி இளைஞர்களிடம் பல லட்சம் ரூபாய் மோசடி செய்த நபரை கோவை போலீசார் கைது செய்துள்ளனர். 

கனடாவில் 5 லட்சத்தில் வேலை

அதிக பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற கனவோடு இருக்கும் இளைஞர்களை ஏமாற்றுவதற்காகவே ஒரு கும்பல் சுற்றி வருகிறது. அந்த வகையில் சமூக வலை தளத்தில் கவர்ச்சிகராமன விளம்பரம் கொடுத்து ஏமாற்றும் வேலையை கடந்த சில வருடங்களாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில், கோவை மாவட்டம், சிறுமுகை பகுதியைச் சேர்ந்த வைத்தீஸ்வரன். இவர் ஹோட்டல் மேனேஜ்மென்ட் படித்து உள்ளார். மேலும் வெளிநாட்டில் வேலைக்கு முயற்சி செய்து வருகிறார். அப்பொழுது பேஸ்புக் போன்ற சமூக வலை தளத்தில் கனடாவில் வேலை வாய்ப்பு என்று விளம்பரத்தை பார்த்துள்ளார். இதனையடுத்து அந்த விளம்பரத்தில் உள்ள எண்ணிற்கு தொடர்பு கொண்ட வைத்தீஸ்வரன், தான் கனடாவிற்கு செல்ல வேண்டும் என தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார்.

மர்ம நபரை கைது செய்த போலீஸ்

இதனையடுத்து பிரகாஷ் என்பவர் வைத்தீஸ்வரனை நேரடியாக சந்தித்துள்ளார். அப்போது கனடாவில் மாதம் 5 லட்சம் ரூபாயில் வேலை இருப்பதாகவும் அந்த வேலை உனக்கு தான் என உறுதி அளித்துள்ளார். மேலும் இந்த வேலைக்கு விசா வாங்க 3 லட்சம் ரூபாய் செலவாகும் என தெரிவித்துள்ளார். இதனை நம்பிய வைத்தீஸ்வரன் 3 லட்சம் ரூபாய் கொடுத்துள்ளார். மேலும் உங்கள் நண்பர்கள் யாராவது கனடாவிற்கு செல்ல விருப்பதாக இருந்தால் அவர்களையும் அழைத்து வரும்படி தெரிவித்துள்ளார்.

இளைஞர்களிடம் 23 லட்சம் மோசடி

இதனை நம்பிய வைத்தீஸ்வரன் தனது நண்பர்கள்  வினோத், பிரதீப், ஆதித்யா, நந்தகுமார் ஆகியோரின் அழைத்துச் சென்று அறிமுகம் செய்து வைத்துள்ளார். அவர்களும் வெளிநாடு வேலை என்ற ஆசையில் மொத்தமாக 23 லட்சம் ரூபாய் கொடுத்துள்ளனர். பணத்தை வாங்கிய பிரகாஷ் வேலையை மட்டும் வாங்கி கொடுக்காமல் தொடர்ந்து ஏமாற்றியுள்ளார். இதனையடுத்து பாதிக்கப்பட்டவர்கள் கடந்த 2021ஆம் ஆண்டு போலீசில் புகார் அளித்தனர். இதனையடுத்து போலீசார் வெளிநாடு வேலை என ஏமாற்றிய நபரை கண்டறிந்து சத்தியமங்கலத்தை சேர்ந்த பிரகாஷ் என்பரவை கைது செய்துள்ளனர். 

இதையும் படியுங்கள்

கலாஷேத்திர மாணவிகளுக்கு பாலியல் தொல்லை..! உதவி பேராசிரியர் ஹரி பத்மன் திடீர் தலைமறைவு- தேடும் பணியில் போலீசார்
 

PREV
click me!

Recommended Stories

பள்ளி, கல்லூரி மாணவிகளை ஒரே நேரத்தில் கரெக்ட் செய்த இளைஞர்! கை குழந்தைகளுடன் 2 பேரும் கதறல்! இறுதியில் நடந்த ட்விஸ்ட்!
இதற்காக தான் கார் டிரைவர் ஹரீஷை கூலிப்படை ஏவி கொன்றேன்! மஞ்சுளாவின் சினிமாவை மிஞ்சிய பரபரப்பு வாக்குமூலம்!