கோவை மாவட்டம் சின்னியம்பாளையம் பகுதியில் கல்லூரி மாணவர் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோவை சின்னியம்பாளையம் பகுதியில் ஆர்ஜிபுதூரில் வேட்டைக்காரன் கோவில் உள்ளது. இந்தப் பகுதி அடர்ந்த முட்புதராகவும், பொதுமக்கள் செல்வதற்கு அச்சப்படக்கூடிய பகுதியாகவும் இருக்கும். இதனால் தனியாக இந்த வழியே செல்வதற்கு மக்கள் அஞ்சுவார்கள்.
இந்தப் பகுதியில் நேற்றிரவு புவனேஷ் குமாரின் நண்பர் பாலாஜி மற்றும் ஒரு சில நண்பர்கள் மது அருந்திக் கொண்டிருந்தனர். இந்த நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த நந்தகுமார் (22) மற்றும் அவரது நண்பர்களும் அதே பகுதியில் வேறொரு இடத்தில் மது அருந்திக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. பாலாஜி, புவனேஷ் குமார் மற்றும் நந்தகுமார் என நண்பர்களுக்கு இடையே மதுபோதையில் திடீரென வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இறுதியில் வாக்குவாதம் கைகலப்பாக மாறியுள்ளது.
கீழடி அருங்காட்சியகத்தை குடும்பத்துடன் பார்த்து ரசித்த சூர்யா, ஜோதிகா
மது போதையில் இருந்த இரண்டு குழுவினரும் சின்னியம்பாளையம் பகுதியில் ஒருவருக்கொருவர் தாக்கிக் கொண்டனர். அப்போது நந்தகுமார் மற்றும் அவரது நண்பர்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால் புவனேஷ்குமாரை குத்தியுள்ளனர்.
ரத்த வெள்ளத்தில் சாய்ந்த புவனேஷ் குமாரை உடனடியாக கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அவர் வரும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இவர் கல்லூரி மாணவர் என்று தெரிய வந்துள்ளது.
சிறுவன் ஓட்டி வந்த இருசக்கர வாகனத்தால் 2 லாரிகள் மோதி விபத்து; சிறுவன் பலி
இந்த சம்பவத்தை அடுத்து அங்கிருந்து நந்தகுமார் மற்றும் நண்பர்கள் தப்பித்துச் சென்றனர். தகவல் அறிந்த பீளமேடு போலீசார் உடனடியாக சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். கோவை மாநகர காவல் துறையினர் கல்லூரி மாணவர் கொலை செய்யப்பட்டது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.