கத்தியை காட்டி மிரட்டி ரூ.43.5 லட்சம் பணம் அபேஷ்… கொள்ளை கும்பலுக்கு போலீஸார் வலைவீச்சு!!

By Narendran S  |  First Published Mar 30, 2023, 11:55 PM IST

கோவை மதுக்கரையை அருகே கத்தியை காட்டி மிரட்டி 43.5 லட்சம் ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


கோவை மதுக்கரையை அருகே கத்தியை காட்டி மிரட்டி 43.5 லட்சம் ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் கூத்தநாடு பகுதியை சேர்ந்தவர் பரத். தங்க நகை தயாரிப்பாளர். இவரது நண்பர் ரோகித். இவர்கள் இருவரும் கடந்த 28 ஆம் தேதி மாலை 600 கிராம் தங்க நகைகளை எடுத்துக்கொண்டு கோவை வந்தனர். கோவை டவுன்ஹால் பகுதியில் தங்க நகை கடை நடத்தி வரும் வடமாநிலத்தை சேர்ந்த நந்தகணேஷ் என்பவரிடம் நகைகளை கொடுத்து விட்டு 43.5 லட்ச ரூபாய் பணத்தை பெற்றுக்கொண்டு நந்தகணேஷ் இல்லத்திலேயே தங்கினர்.

இதையும் படிங்க: நள்ளிரவில் முனங்கல் சத்தம்.. எட்டி பார்த்த கணவருக்கு காத்திருந்த அதிர்ச்சி.. இறுதியில் நடந்த பயங்கரம்..!

Tap to resize

Latest Videos

பின்னர் 29ஆம் தேதி காலை பணத்துடன் இரு சக்கர வாகனத்தில் கேரளா மாநிலம் பாலக்காடு கிளம்பினர். இரு சக்கர வாகனத்தில் க.க.சாவடி அருகே சென்ற போது, இவர்களைப் பின் தொடர்ந்து கார் மற்றும் இருசக்கர வாகனத்தில் வந்த ஆறு பேர், நகை கடை உரிமையாளர்கள் இருவரையும் மறித்து கத்தியை காட்டி மிரட்டி பணத்தை பறித்து சென்றனர்.

இதையும் படிங்க: தஞ்சையில் மூதாட்டியை கொலை செய்து குவளையில் அடைத்து வைத்த பேத்தி கைது

இது குறித்து பரத் மற்றும் ரோகித் ஆகியோர் மதுக்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரில், பணத்துடன் இரு சக்கர வாகனத்தில் சென்ற போது, 6 நபர்கள் கத்தியை காட்டி மிரட்டி பணத்தை பறித்து சென்றதாக தெரிவித்திருந்தனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

click me!