
காரைக்குடியில் பயன்பாட்டில் இல்லாத செல்போன் கோபுரத்தைக் காணவில்லை என்று காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
தனியார் நிறுவனத்துக்குச் சொந்தமான செல்போன் கோபுரம் ஒன்று காரைக்குடி புதுச்சந்தைப்பேட்டை தெற்கு பகுதியில் இருந்தது. அந்த டவர் ஏர்டெல் நிறுவனத்துக்கு வாடகைக்கு விடப்பட்டிருந்தது. 2017ஆம் ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் இந்த செல்போன் கோபுரம் பயன்பாட்டில் இல்லை என்று சொல்லப்படுகிறது.
வைர வியாபாரி போல நாடகமாடி ஒரு கோடி ரூபாய் வைரங்களைக் கொள்ளையடித்த 2 பேர் கைது
இந்நிலையில் செல்போன் கோபுர நிறுவனம் அதிகாரிகள் தாஜ்மல்ஹான், மேலாளர் சுரேஷ், டெக்னீசியன் கணேஷ் பிரபு ஆகியோர் டவரை ஆய்வு செய்யச் சென்றனர். அப்போது செல்போன் கோபுரம் மாயமானதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதனையடுத்து உடனடியாக, இதுகுறித்து காரைக்குடி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
இதனை விசாரித்த நீதிபதி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த உத்தரவிட்டார். நீதிபதியின் உத்தரவுப்படி காரைக்குடி தெற்கு பகுதி காவல்துறையினர் செல்போன் கோபுரம் மாயமானது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஏற்கெனவே முத்துப்பட்டணம் பகுதியில் 2006 முதல் இயங்கிவந்த செல்போன் டவரும், கம்பன் அருணாச்சலம் தெருவில் 2003 முதல் இயங்கிவந்த செல்போன் டவரும் காணாமல் போயின. இவை பற்றி கடந்த பிப்ரவரி மாதம் புகார் கொடுக்கப்பட்டது. இந்த வழக்குகளை காரைக்குடி வடக்கு போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சிபிஐ வைர விழா: இன்று பிரதமர் தொடங்கி வைக்கிறார்! புதிய அலுவலகங்கள், ட்விட்டர் பக்கம் திறப்பு!