பட்டப்பகலில் துணிகரம்.. இரும்பு கம்பியால் கொடூரமாக தாக்கப்பட்ட ஊழியர் - 14 லட்சம் கொள்ளை!

Ansgar R |  
Published : Jul 22, 2023, 04:48 PM IST
பட்டப்பகலில் துணிகரம்.. இரும்பு கம்பியால் கொடூரமாக தாக்கப்பட்ட ஊழியர் - 14 லட்சம் கொள்ளை!

சுருக்கம்

பட்டப்பகலில் இரும்பு காமியால் ஒருவரை தாக்கிவிட்டு சுமார் 14 லட்சம் பணத்தை கொள்ளையர்கள் கொள்ளையடித்துள்ளனர்

தலைநகர் டெல்லியில், அடையாளம் தெரியாத நான்கு பேர், ஒரு நபரை இரும்பு கம்பியால் பலமாக தாக்கி சுமார் 14 லட்ச ரூபாய்க்கும் அதிகமான பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியின் சராய் ரோஹில்லா பகுதியில் இந்த திடுக்கிடும் சம்பவம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த கொள்ளை சம்பவம் குறித்து தகவல் அறிந்த துணை போலீஸ் கமிஷனர் (வடக்கு) சாகர் சிங் கல்சி, நேற்று வெள்ளிக்கிழமை மதியம் வேலா ராம் என்ற அந்த பாதிக்கப்பட்ட நபர் அளித்த புகாரை விசாரித்து வருகின்றார். ராம், ராஜஸ்தானில் உள்ள சிரோஹியில் வசிப்பவர் என்றும், இவர் சாந்தினி சவுக்கில் பணிபுரிந்து வருகிறார் என்றும் தெரியவந்துள்ளது.

70 வயது மூதாட்டியை வன்கொடுமை செய்ய முயன்ற தொழிலாளி; நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

வெள்ளிக்கிழமை மதியம் 1 மணியளவில் சுமார் 14,96,600 ரூபாயை அமன் என்பவரிடம் வழங்குவதற்காக ராம் சாஸ்திரி நகருக்குச் சென்றதாக சாகர் சிங் தெரிவித்தார். சாஸ்திரி நகரில் உள்ள பொதுக் கழிப்பறைக்கு ராம் வந்தபோது, ​​இரண்டு பைக்கில் வந்த நான்கு பேர், அவரைத் தலையில் இரும்பு கம்பியால் தாக்கிவிட்டு, பணம் இருந்த பையுடன் தப்பிச் சென்றதாக போலீசார் தெரிவித்துள்ளனர். 

ராம் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், இந்த கொள்ளை சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டு, குற்றப் புலனாய்வுப் பிரிவினர் சம்பவ இடத்தை ஆய்வு செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

யூடியூப்பில் கிரைம் நிகழ்ச்சிகளை பார்த்து நல்ல பாம்பை கடிக்க வைத்து கொன்ற காதலி! புது காதலனுடன் எஸ்கேப்.!

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

பள்ளி, கல்லூரி மாணவிகளை ஒரே நேரத்தில் கரெக்ட் செய்த இளைஞர்! கை குழந்தைகளுடன் 2 பேரும் கதறல்! இறுதியில் நடந்த ட்விஸ்ட்!
இதற்காக தான் கார் டிரைவர் ஹரீஷை கூலிப்படை ஏவி கொன்றேன்! மஞ்சுளாவின் சினிமாவை மிஞ்சிய பரபரப்பு வாக்குமூலம்!