மஹி ஆர்யாவை பாலியல் ரீதியாக தொந்தரவு செய்து வந்துள்ளார். நாளுக்கு நாள் அவரது தொல்லை அதிகரிக்கவே காதலன் என்று கூட பாராமல் கொலை செய்ய முடிவு செய்தார்.
கிரைம் பேட்ரோல் தொலைக்காட்சி தொடரை பார்த்து உத்தராகண்டில் நல்ல பாம்பை கடிக்க வைத்து காதலரை கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரகாண்ட் மாநிலம் நைனிடால் மாவட்டம் ஹல்த்வானியைச் சேர்ந்தவர் மஹி ஆர்யா (28). இவரது காதலர் அங்கித் சவுகான். இவர்கள் இருவரும் காதலித்து வந்தனர். இந்நிலையில், மஹி ஆர்யாவை பாலியல் ரீதியாக தொந்தரவு செய்து வந்துள்ளார். நாளுக்கு நாள் அவரது தொல்லை அதிகரிக்கவே காதலன் என்று கூட பாராமல் கொலை செய்ய முடிவு செய்தார்.
இதையும் படிங்க;- பக்கா பிளான் போட்டு மனைவி கொலை.. அழுது கதறி நாடகமாடிய கணவர் சிக்கியது எப்படி? பரபரப்பு தகவல்..!
இதற்காக தனது புதிய காதலர் தீப், வீட்டு வேலைக் காரி உஷாதேவி, அவரது கணவர் ராமா வதார் ஆகியோரையும் கூட்டு சேர்த்துள்ளார். கொலை செய்வது எப்படி என்பதை 'கிரைம் பேட்ரோல்' என்ற தொலைக்காட்சி தொடரை பார்த்து தெரிந்து கொண்டார். அது மட்டுமல்லாமல் கொலை செய்த பிறகு தடயங்களை அழிப்பது எப்படி என்பதையும் யூடியூப் மூலம் பார்த்துள்ளார்.
இதையும் படிங்க;- எவ்வளவு சொல்லியும் கேட்காமல் நண்பனின் மனைவியை கரெக்ட் செய்து உல்லாசம்.. இறுதியில் நடந்த பயங்கரம்.!
இந்நிலையில், 2 மாதங்களுக்கு முன்பு வீட்டுக்கு வந்த காதலரை நல்ல பாம்பை விட்டு கடிக்கச் செய்துள்ளார். இதில், அங்கித் சவுகான் உயிரிழந்தார். இதுதொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தியதில் 2 மாதங்களுக்கு பிறகு அங்கித் சவுகான் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இந்த கொலை சம்வம் தொடர்பாக 4 பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த கொலை சம்பவம் தொடர்பாக துப்பு கொடுப்பவர்களுக்கு தலா ரூ.25 ஆயிரம் பரிசுத்தொகையை நைனிடால் எஸ்.பி. அறிவித்துள்ளார்.