கணவன், மனைவி சண்டையை தடுக்க வந்த மைத்துனர் கத்தியால் குத்தி பலி - 3 பேர் படுகாயம்.

Published : Jul 21, 2023, 03:27 PM ISTUpdated : Dec 09, 2024, 04:58 PM IST
கணவன், மனைவி சண்டையை தடுக்க வந்த மைத்துனர் கத்தியால் குத்தி பலி - 3 பேர் படுகாயம்.

சுருக்கம்

திருவண்ணாலை மாவட்டத்தில் கணவன், மனைவி இடையேயான சண்டையை தடுக்க வந்த மைத்துனர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் திண்டிவனம் சாலை, ராம்ஜி நகரைச் சேர்ந்தவர் சுமை தூக்கும் தொழிலாளி ராம்ஜி. இவரது மனைவி சுகுணா. இவர்களுக்கு திருமணமாகி 8 வயதில் கீர்த்திகேஷ் மற்றும் 6 வயதில் அகிலன் என இரண்டு ஆண் பிள்ளைகள் உள்ளனர். நேற்று இரவு கஞ்சா போதையில் இருந்த ராம்ஜி தனது மனைவி சுகுணாவிடம் வாய் தகராறில் சண்டை போட்டுள்ளார். 

இதனை தடுக்க வந்த ராம்ஜியின் மைத்துனர் துப்புரவாளர்  பரணி, மாமியார் விஜயா மற்றும் மனைவியின் அக்கா கல்கி, மாமனார் பாண்டியன் என்ற நான்கு பேரையும் ராம்ஜி கத்தியால் கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளார். தாக்குதலில் படுகாயமடைந்த மைத்துனர் பரணி சம்பவ இடத்திலேயே பலியானார். 

விருதுநகர் மாவட்டத்தில் நாளை உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

அருகில் இருந்தவர்கள் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்ததை அடுத்து விரைந்து வந்த காவல் துறையினர் கொலை செய்யப்பட்ட பரணியின் உடலை மீட்டு  பிரேத பரிசோதனைக்கு திருவண்ணாமலை அரசு மருத்துவமனை மருத்துவ கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர்.

அல்லேரியில் பாம்பு கடியால் தொடரும் அவலம்; சிறுமியை தொடர்ந்து மேலும் ஒருவர் பலி

மேலும்  கத்தியால் குத்தியதில் படுகாயம் அடைந்த மூவரையும்  திருவண்ணாமலை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். திருவண்ணாமலை குற்றபிரிவு காவல் துறையினர்  கொலை குறித்து வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய ராம்ஜியை 2 மணி நேரத்தில் கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து காவல்துறையின் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

PREV
click me!

Recommended Stories

பள்ளி, கல்லூரி மாணவிகளை ஒரே நேரத்தில் கரெக்ட் செய்த இளைஞர்! கை குழந்தைகளுடன் 2 பேரும் கதறல்! இறுதியில் நடந்த ட்விஸ்ட்!
இதற்காக தான் கார் டிரைவர் ஹரீஷை கூலிப்படை ஏவி கொன்றேன்! மஞ்சுளாவின் சினிமாவை மிஞ்சிய பரபரப்பு வாக்குமூலம்!