குமரியில் 15 வயது சிறுமியை கடத்தி குடும்பம் நடத்திய நபர்; நீதிமன்றம் அதிரடி உத்தரவு

By Velmurugan s  |  First Published Dec 16, 2023, 6:13 PM IST

கன்னியாகுமரியில் 15 வயது சிறுமியை திருமணம் செய்து குடும்பம் நடத்திய நபருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 


கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே பள்ளம் துறை பகுதியைச் சேர்ந்தவர் ராபர்ட் பெல்லார்மின் (வயது 44). இவருக்கு திருமணமாகி மனைவி பிரிந்து வாழ்ந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் அவர் இரண்டாவது திருமணம் செய்ய பெண் பார்க்கப்பட்டது. அப்போது தஞ்சாவூர் பாத்திமா நகர் பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கும், ராபர்ட் பெல்லார்மினுக்கும் இடையே பழக்கம் ஏற்படவே பெண்பார்க்க அங்கு சென்றுள்ளார். அவரது உறவுக்கார 15 வயது சிறுமியை ராபர்ட் பெல்லார்மினுக்கு திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. 

இதையடுத்து ராபர்ட் பெல்லார்மினுக்கும் அந்த 15 வயது சிறுமிக்கும் கடந்த 2017-ம் ஆண்டு திருமணம் நடந்தது. அதன் பிறகு பள்ளம் துறை பகுதியில் வசித்து வந்தனர். ராபர்ட்பெல்லார்மின் 15 வயது சிறுமியை திருமணம் செய்த தகவல் குழந்தைகள் நல அதிகாரிகளுக்கு தெரியவந்தது. இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட அதிகாரிகள் சிறுமியை மீட்டனர். இதுகுறித்து நாகர்கோவில் மகளிர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் அடிப்படையில் ராபர்ட் பெல்லார்மின் மீது நாகர்கோவில் மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். 

Latest Videos

undefined

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

பின்னர் அவர் ஜாமினில் விடுதலையானார். இது தொடர்பான வழக்கு நாகர்கோவில் போக்சோ நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் நீதிபதி ஜோசப் ஜாய் இன்று தீர்ப்பு கூறினார் .தீர்ப்பில் ராபர்ட் பெல்லார்மினுக்கு பாலியல் வழக்கிற்கு 20 ஆண்டு சிறை தண்டனையும், ரூ. 25 ஆயிரம் அபராதமும் விதித்தார். 25 ஆயிரம் பணத்தை கட்ட தவறினால் மேலும் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனைக்கு உத்தரவிடப்பட்டது. சிறுமி கடத்தல் வழக்கிற்கு 5 ஆண்டு தண்டனையும், ரூ.5ஆயிரம் அபாரதமும் பணத்தை கட்ட தவறினால் ஆறு மாதம் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது.

2011ல் எம்எல்ஏக்கள் செய்த துரோகம் தான் கேப்டனின் உடல்நிலை மோசமாவதற்கு காரணம் - பிரேமலதா ஆதங்கம்

குழந்தை திருமணத்திற்கு ஒரு வருடம் ஜெயில் தண்டனையும், ரூ.5ஆயிரம் அபராதமும் பணத்தை கட்ட தவறினால் ஆறு மாதம் ஜெயில் தண்டனையும் விதித்து தீர்ப்பு கூறினார். இந்த தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்குமாறும் கூறியிருந்தார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ஒரு மாத காலத்திற்குள் அரசு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டார். ராபர்ட்பெல்லார்மினுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டதையடுத்து மகளிர் இன்ஸ்பெக்டர் சாந்தி தலைமையிலான போலீசார் அவரை கைது செய்தனர்.

click me!