எனக்கு ஸ்கெட்ச் போட்டதால் பிரபுவை கொலை செய்தேன்; திருச்சி ரௌடி கொலையில் பரபரப்பு வாக்குமூலம்

By Velmurugan s  |  First Published Dec 14, 2023, 4:16 PM IST

என்னை கொலை செய்ய திட்டமிட்டதால் ராமஜெயம் கொலை வழக்கில் விசாரிக்கப்பட்ட பிரபுவை கொலை செய்ததாக கைது செய்யப்பட்ட நபர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.


திருச்சி புத்தூர் அரசு மருத்துவமனை எதிரில்  பிரபு ஆம்புலன்ஸ் சர்வீஸ் நடத்தி வந்த பிரபு என்கிற பிரபாகரன் (46). கடந்த வாரம் இரவு அவரது அலுவலகத்தில் அமர்ந்திருந்தபோது அங்கு வந்த 3பேர் அலுவலகத்தில் உள்ளே  பிரபுவை சரமாரியாக வெட்டி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். இதில் பிரபு ரத்த வெள்ளத்தில் துடி துடித்து பரிதாபமாக உயிரிழந்தார். 

தகவல் அறிந்த அரசு மருத்துவமனை காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பிரபுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனை தொடர்ந்து கொலை வழக்கு தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். மேலும், இந்த கொலையில் திருவெறும்பூர் கைலாஷ் நகர் பகுதியைச் சேர்ந்த ரவுடி அப்பு என்கிற ஹரி கிருஷ்ணன் (32) என்பவருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்தது. தலைமறைவாக இருந்த அப்புவே காவல்துறையினர் தேடி வந்தனர்.

Tap to resize

Latest Videos

undefined

உதகை அரசு மருத்துவமனையில் மருத்துவர்களின் பற்றாக்குறையால் நோயாளி உயிரிழப்பு? இளைஞர் பரபரப்பு குற்றச்சாட்டு

அப்பு சில ஆண்டுகள் பிரபுவிடம் ஓட்டுநராக வேலை பார்த்து வந்துள்ளார். பின்னர் தனியாக ஆம்புலன்ஸ் தொழிலை செய்து வந்தார். இதனால் பிரபுவுக்கும், அப்புவுக்கும் இடையே தொழில் போட்டி ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பு பிரபாகரனை கொலை செய்ய திட்டமிட்டு கூலிப்படையை வைத்து அவரது அலுவலகத்திலேயே கொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்த கொலை வழக்கு தொடர்பாக ஏற்கனவே மூன்று பேர் கைது செய்யப்பட்ட நிலையில் தலைமறைவாக இருந்த  ரவுடி அப்பு துவாக்குடி செக்போஸ்ட் அருகில் தலைமறைவாக இருப்பதாக தகவல் வந்ததை அடுத்து காவல்துறையினர் அங்கு விரைந்து சென்று பதுங்கி இருந்த அப்புவை கைது செய்தனர்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

விசாரணையில் என்னை கொல்ல முயன்றதால் பிரபுவை படுகொலை செய்ததாக ரவுடி அப்பு  தெரிவித்துள்ளார். தொடர்ந்து காவல்துறையினர் அப்புவை திருச்சி நீதிமன்றத்தில் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தியதி பின்னர் திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

 

click me!