தஞ்சையை பதற வைத்த கொலை சம்பவம்; மனைவி உட்பட மூவரை வெட்டி வீசிவிட்டு தப்பி சென்றவர் விபத்தில் சிக்கி பலி

By Velmurugan s  |  First Published Dec 16, 2023, 12:14 PM IST

கணவன், மனைவி இடையேயான பிரச்சினையில் மனைவி உட்பட 3 பேரை வெட்டி சாய்த்துவிட்டு காரில் சென்ற நபர் விபத்தில் சிக்கி உயிரிழந்தார். 


தஞ்சாவூர் மாவட்டம் நாஞ்சிக்கோட்டை சாலை விக்டோரியா நகரைச் சேர்ந்தவர் நித்தியா. ஐஓபி வங்கியில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இவரது கணவர் சுந்தர் கணேஷ், ஐ சி ஐ சி ஐ வங்கியில் பணிபுரிந்து விருப்ப ஓய்வு பெற்றவர். இருவருக்கும் இடையே குடும்ப பிரச்சினை இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் அடிக்கடி இருவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டு மனக்கசப்பு காரணமாக இரண்டு மாதமாக வீட்டிலேயே இருந்து உள்ளார். 

Tap to resize

Latest Videos

undefined

இதனிடையே இவரது மனைவி தஞ்சை நாஞ்சிக்கோட்டை சாலையில் புதிதாக ஒரு வீடு வாங்கியதாகவும், இது கணவரின் விருப்பம் இல்லாமல் இந்த வீட்டை வாங்கியதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று காலை வீட்டில் இருந்த தனது மனைவி நித்யாவை அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு வெளியே நிறுத்தி வைத்திருந்த தனது காரில் வெட்டிய அரிவாளுடன் தப்பி சென்றுள்ளார். 

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

மேலும் யாகப்பாநகர் பிரதான சாலையில் உள்ள  பால் டெப்போவில் இருந்த கடை உரிமையாளர்கள் கோபி மற்றும் தாமரை இருவரையும் சரமாரியாக வெட்டிவிட்டு காரில் தப்பி சென்றுள்ளார். தப்பிச் செல்லும் போது தஞ்சை, திருச்சி தேசிய நெடுஞ்சாலை செங்கிப்பட்டி அருகே முத்தாண்டிபட்டி என்ற பகுதியில் சாலையை கடக்க முயன்ற டிப்பர் லாரி மீது பக்கவாட்டில் மோதி கார் விபத்தில் சிக்சியது. 

Omni Bus Accident: லாரி - தனியார் சொகுசு பேருந்து நேருக்கு நேர் மோதல்.. 2 பேர் பலி.. 20 பேர் படுகாயம்..!

இந்த விபத்தில் கார் நசுங்கி சுந்தர் கணேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அப்போது காரில் இருந்த அரிவாள் மற்றும் அவரது கை துண்டாக கீழே விழுந்தது. இதனிடையே அரிவாள் வெட்டில் படுகாயமடைந்த கோபிநாத் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பலன் இன்றி உயிர் இழந்தார். கொலை மற்றும் விபத்து தொடர்பாக தஞ்சை நகர தெற்கு காவல் துறை தமிழ் பல்கலைக்கழக காவல்துறையினர் மற்றும் செங்கிப்பட்டி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

click me!