நடுரோட்டில் டாக்டரிடம் அத்துமீறி நடந்த வாலிபர்..! இரவில் நடந்த கொடூரம்..!

Published : Feb 08, 2020, 03:49 PM ISTUpdated : Feb 08, 2020, 03:53 PM IST
நடுரோட்டில் டாக்டரிடம் அத்துமீறி நடந்த வாலிபர்..! இரவில் நடந்த கொடூரம்..!

சுருக்கம்

பல்லாவரம் கார்டன் சாலை அருகே வந்தபோது பின்னால் வந்த வாலிபர் கீதாவின் வாகனத்தை மறித்துள்ளார். அவரிடம் எதற்காக வாகனத்தை மறிக்கிறீர்கள்? என கீதா கேட்டுள்ளார். அதற்கு அந்த வாலிபர் கீதாவை தகாத வார்த்தைகளால் திட்டியதுடன் பாலியல் சீண்டலிலும் ஈடுபட்டுள்ளார். 

சென்னை தாம்பரத்தை அடுத்திருக்கும் பல்லாவரத்தைச் சேர்ந்தவர் கீதா(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவரது வயது 36. மருத்துவம் படித்திருக்கும் இவர் சென்னை சேத்துப்பட்டில் இருக்கும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தில் மருத்துவ ஆராய்ச்சியாளராக பணியாற்றி வருகிறார். தினமும் பல்லாவரத்தில் இருந்து தனது இருசக்கர வாகனத்தில் பணிக்கு சென்று வந்துள்ளார்.

நேற்றும் வழக்கம் போல கீதா பணிக்கு தனது வாகனத்தில் சென்றார். இரவு வேலை முடிந்ததும் மீண்டும் வீட்டிற்கு செல்வதற்காக தனது பைக்கில் பல்லாவரம் வந்து கொண்டிருந்தார். அப்போது அவரை நோட்டமிட்ட வாலிபர் ஒருவர் கீதாவை பின்தொடர்ந்து வந்துள்ளார். பல்லாவரம் கார்டன் சாலை அருகே வந்தபோது பின்னால் வந்த வாலிபர் கீதாவின் வாகனத்தை மறித்துள்ளார். அவரிடம் எதற்காக வாகனத்தை மறிக்கிறீர்கள்? என கீதா கேட்டுள்ளார். அதற்கு அந்த வாலிபர் கீதாவை தகாத வார்த்தைகளால் திட்டியதுடன் பாலியல் சீண்டலிலும் ஈடுபட்டுள்ளார்.

அதிர்ச்சியடைந்த கீதா கூச்சல் போடவே, வாலிபர் தப்பி ஓடிவிட்டார். பின் இதுபற்றி அவர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி வழக்கு பதிவு செய்த காவலர்கள் விசாரணை மேற்கொண்டு அந்த பகுதியில் இருக்கும் கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். அதில் பதிவாகியிருந்த காட்சிகளை வைத்து பாலியல் சீண்டலில் ஈடுபட்ட வாலிபர் திரிசூலத்தைச் சேர்ந்த ஆரோக்கிய ராஜ் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர்.அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

276 இளைஞர்களுடன் 6 இளம்பெண்கள்... நள்ளிரவில் நடுக்காட்டுக்குள் கையும் களவுமாக சிக்கிய சம்பவம்..!

PREV
click me!

Recommended Stories

முதலிரவில் அதிர்ச்சி.. திருமணமான 3 நாளில் விவாகரத்து கேட்ட புதுப்பெண்! நடந்தது என்ன?
ஆண்ட்டியின் அழகில் மயங்கிய கொரியர் ஊழியர்.. ரவுடியின் மனைவிக்கு விடாமல் காதல் மெசேஜ்.. இறுதியில் நடந்த அதிர்ச்சி