கோவையில் பயங்கரம்... பெற்ற தாய், தந்தையை கொடூரமாக வெட்டிக்கொன்ற மகன்...!

Published : Feb 08, 2020, 03:09 PM IST
கோவையில் பயங்கரம்... பெற்ற தாய், தந்தையை கொடூரமாக வெட்டிக்கொன்ற மகன்...!

சுருக்கம்

கோவை மாவட்டத்தை அடுத்த விராலியூர் இந்திரா வீதியை சேர்ந்தவர் சுந்தரம். இவரது மனைவி துளசி. இவர்களுக்கு சாவித்திரி, நாகமணி, திலகவதி, ராசாத்தி ஆகிய 4 மகள்களும், கார்த்திகேயன் (30) என்ற மகனும் உள்ளனர். கார்த்திகேயன் கூலி வேலைக்கு சென்று வருகிறார். இவர் தினமும் குடித்து விட்டு மனைவியிடம் தகராறு செய்து வந்ததால் கோபித்துக்கொண்டு தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார்.

கோவை அருகே குடிக்க பணம் தராத ஆத்திரத்தில் பெற்ற தாய் மற்றம் தந்தையை கொடூர வெட்டிப்படுகொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கோவை மாவட்டத்தை அடுத்த விராலியூர் இந்திரா வீதியை சேர்ந்தவர் சுந்தரம். இவரது மனைவி துளசி. இவர்களுக்கு சாவித்திரி, நாகமணி, திலகவதி, ராசாத்தி ஆகிய 4 மகள்களும், கார்த்திகேயன் (30) என்ற மகனும் உள்ளனர். கார்த்திகேயன் கூலி வேலைக்கு சென்று வருகிறார். இவர் தினமும் குடித்து விட்டு மனைவியிடம் தகராறு செய்து வந்ததால் கோபித்துக்கொண்டு தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார்.

இதையும் படிங்க;- கொடூர முகத்தை காட்டும் கொரோனா.. கொத்து கொத்தாக மடியும் சீனர்கள்.. நோய்க்கான காரணம் குறித்து அதிர்ச்சி தகவல்..!

இதனால் சுமார் 5 வருடங்களாக பெற்றோருடன் வசித்து வந்தார். தினமும் குடித்து விட்டு பெற்றோரிடமும் தகராறில் ஈடுபட்டு கடுமையாக தாக்கியுள்ளார். இது தொடர்பாக தந்தை சுந்தரம் ஆலாந்துறை காவல் நிலையத்தில் புகார் கொடுத்து வந்தார். இதனையடுத்து, போலீசார் கார்த்திகேயனை அழைத்து எச்சரித்து அனுப்பினர். இதனால், ஆத்திரமடைந்த கார்த்திகேயன் குடிபோதையில் வீட்டிற்கு வந்து குடிக்க பணம் கேட்டு மீண்டும் பெற்றோருடன் தகராறில் ஈடுபட்டார். ஆனால், அவர்கள் பணம் கொடுக்கவில்லை. இதனையடுத்து, தூக்கிக்கொண்டிருந்த தந்தை சுந்தரம், தாய் துளசி ஆகியோரை அரிவாளால் சரமாரியாக வெட்டினார். இதில், ரத்த வெள்ளத்தில் சரிந்த இருவரும் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தனர். பின்னர், கார்த்திகேயன் வீட்டின் கதவை சாத்தி விட்டு தப்பி ஓடி விட்டார். 

இந்நிலையில், நீண்ட நேரமாகியும் சுந்தரம் வீட்டின் கதவு திறக்கப்படாமல் அதிர்ச்சி அடைந்தனர். இதனையடுத்து, அக்டகம் பக்கத்தினர் வீட்டின் கதவை திறந்து பார்த்த போது இருவரும் ரத்த வெள்ளத்தில் கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் இருவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தலைமறைவாக உள்ள கார்த்திகேயனை தீவிரமாக தேடி வருகின்றனர். 

PREV
click me!

Recommended Stories

முதலிரவில் அதிர்ச்சி.. திருமணமான 3 நாளில் விவாகரத்து கேட்ட புதுப்பெண்! நடந்தது என்ன?
ஆண்ட்டியின் அழகில் மயங்கிய கொரியர் ஊழியர்.. ரவுடியின் மனைவிக்கு விடாமல் காதல் மெசேஜ்.. இறுதியில் நடந்த அதிர்ச்சி