அடங்காத காமவெறியுடன் அலைந்த கொடூரன்..! 5 வயது சிறுமியையும் விட்டுவைக்காத அக்கிரமம்..!

Published : Feb 08, 2020, 12:33 PM IST
அடங்காத காமவெறியுடன் அலைந்த கொடூரன்..! 5 வயது சிறுமியையும் விட்டுவைக்காத அக்கிரமம்..!

சுருக்கம்

சிறுமியை நோட்டமிட்ட ஆனந்த் அவளிடம் பேச்சு கொடுத்திருக்கிறார். பின் மிட்டாய் வாங்கி தருவதாக கூறி யாருமில்லாத இடத்திற்கு சிறுமியை அழைத்து சென்ற ஆனந்த், அங்கு வைத்து சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். 

கோவை மாவட்டம் சிங்காநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்த்(46). கூலித்தொழிலாளியான இவர் அங்கிருக்கும் ஒரு மரக்குடோனில் பணியாற்றி வருகிறார். சம்பவத்தன்று குடோனில் ஆனந்த் வேலை பார்த்து கொண்டிருந்தார். அப்போது அங்கு ரேவதி(பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்கிற 5 வயது சிறுமி விளையாடி கொண்டிருந்தார்.

சிறுமியின் பெற்றோரும் அதே குடோனில் ஆனந்துடன் பணியாற்றி வருகின்றனர். அன்று வேலை நேரத்தில் சிறுமியையும் குடோனிற்கு அழைத்து வந்த அவர்கள், சிறுமியை விளையாடவிட்டு தங்கள் வேலைகளை பார்த்து கொண்டிருந்தனர். சிறுமியை நோட்டமிட்ட ஆனந்த் அவளிடம் பேச்சு கொடுத்திருக்கிறார். பின் மிட்டாய் வாங்கி தருவதாக கூறி யாருமில்லாத இடத்திற்கு சிறுமியை அழைத்து சென்ற ஆனந்த், அங்கு வைத்து சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

அதுபற்றி ஏதும் அறியாத சிறுமி திடீரென கதறி அழுதுள்ளாள். சிறுமியின் அழுகுரல் கேட்டு பெற்றோர் ஓடி வந்தனர். அப்போது ஆனந்தின் செயலை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர்கள், அவரை பிடித்து சரமாரியாக தாக்கினர். பின் மகளிர் காவல்நிலையத்தில் சிறுமியின் பெற்றோர் சார்பாக புகார் அளிக்கப்பட்டது. அதனடிப்படையில் வழக்கு பதிவு செய்த காவலர்கள் போக்சோவின் கீழ் ஆனந்தை கைது செய்து சிறையில் அடைந்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

276 இளைஞர்களுடன் 6 இளம்பெண்கள்... நள்ளிரவில் நடுக்காட்டுக்குள் கையும் களவுமாக சிக்கிய சம்பவம்..!

PREV
click me!

Recommended Stories

பெற்ற குழந்தையை கொன்ற கொடூர தாய்.. கோர்ட் வழங்கிய பரபரப்பு தீர்ப்பு.. கள்ளக்காதலன் எஸ்கேப்..
லெஸ்பியன் உறவு! மால்தி தேவியுடன் மனைவி உல்லாசம்! நேரில் பார்த்த கணவர்! இறுதியில் நடந்த அதிர்ச்சி!