மதுரை, காட்டு மன்னார் கோயில் "பாப்புலர் பிரண்ட் " நிர்வாகிகளை வீடுபுகுந்த தூக்கிய NIA.. உச்சகட்ட பதற்றம்.

By Ezhilarasan BabuFirst Published Sep 22, 2022, 1:55 PM IST
Highlights

நாட்டின் பல்வேறு இடங்களில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அலுவலகங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வரும் நிலையில் 100க்கும்  அதிகமான நிர்வாகிகள், தொண்டர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வரிசையில் மதுரை, கடலூர் உள்ளிட்ட இடங்களில் அந்த அமைப்பின் நிர்வாகிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

நாட்டின் பல்வேறு இடங்களில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அலுவலகங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வரும் நிலையில் 100க்கும்  அதிகமான நிர்வாகிகள், தொண்டர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வரிசையில் மதுரை, கடலூர் உள்ளிட்ட இடங்களில் அந்த அமைப்பின் நிர்வாகிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

நாட்டில் பயங்கரவாதத்தை தடுப்பதற்காக தேசிய புலனாய்வு என்ஐஏ என்ற அமைப்பு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. பயங்கரவாதிகளுக்கு நிதி உதவி திரட்டுதல்,  அவர்களுக்கு பயிற்சி முகாம்களை ஏற்பாடு செய்து தருதல்,  மற்றும் தடைசெய்யப்பட்ட அமைப்புகளில் சேர இளைஞர்களை ஊக்குவித்தல் போன்ற செயல்களில் ஈடுபடும் நபர்களை அலுவலகங்களை என்ஐஏ குறி வைத்து வருகிறது.  இதனடிப்படையில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா இந்தியா அமைப்பு இது போன்ற செயல்களில் ஈடுபடுவதாக வந்த புகாரை அடுத்து நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் இந்த சோதனையை தேசிய புலனாய்வு  முகாமை முடிக்கிவிட்டுள்ளது. 

இந்த வரிசையில் தமிழகம், கேரளா, கர்நாடகா என 10க்கும் அதிகமான மாநிலங்களில் என்ஐஏ சோதனை நடந்து வருகிறது, இதில் நூற்றுக்கும் அதிகமான பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா நிர்வாகிகள் உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த திடீர் சோதனையால் சோதனை நடக்கும் இடங்களை முற்றுகையிட்டு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நிர்வாகிகள், தொண்டர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.

இதையும் படியுங்கள்: Popular Front Of India: என்ஐஏ ரெய்டு: பிஎப்ஐ அமைப்புக்கு தடை வருமா?: அமித் ஷா முக்கிய ஆலோசனை

தமிழகத்தைப் பொருத்தவரையில் கோவை, கடலூர் ராமநாதபுரம், திண்டுக்கல், தேனி, தென்காசி உள்ளிட்ட இடங்களில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பில் நிர்வாகிகள் வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. சென்னையை பொறுத்தவரையில் புரசைவாக்கத்தில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் பல மணி நேரமாக சோதனை நடத்தி வருகின்றனர்.

இதையும் படியுங்கள்:  PFI:NIA: என்ஐஏ ரெய்டில் பிஎப்ஐ நிர்வாகிகள் எந்தெந்த மாநிலத்தில் எத்தனை பேர் கைது? தமிழகத்தில் எத்தனை பேர்?

மதுரை பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் நிர்வாகிகளுக்கு சொந்தமான கோரிப்பாளையம், கோமதிபுரம், நெல்பேட்டை, குலமங்கலம், வில்லாபுரம் உள்ளிட்ட 7 இடங்களில் அதிகாலை முதல் சோதனை நடைபெற்று வருகிறது. இதில் மதுரை மாவட்ட செயலாளர் யாசர் அரபாத்திடம் என்ஐஏ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோல் கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோயில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா நிர்வாகியை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்துள்ளனர். கடலூர் காட்டுமன்னார்கோவில் அருகே கொளக்குடியில் வசித்து வருபவர் அபூபக்கர், இவரது மகன் பயாஸ் அகமது (32) பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் கடலூர் மாவட்ட தலைவராக உள்ளார்.

இந்நிலையில் இன்று அதிகாலை முதல் அவரது வீட்டில் 20க்கும் மேற்பட்ட என்ஐஏ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். அதில் பயாஸ் அகமது மடிக்கணினி மற்றும் செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்நிலையில் அவரை அழைத்துச் சென்று சேத்தியாத்தோப்பு காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர் அவர் கைது செய்யப்பட்டள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இதனால் அங்கு பரபரப்பு அதிகரித்துள்ளது.  இது குறித்து தகவல் அறிந்த பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் காட்டுமன்னார் கோயில் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் பயாஸ் அகமது வீடு அமைந்திருக்கும் பகுதி முழுவதையும் என்ஐஏ அதிகாரிகள் தொடர்ந்து சோதனை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது பயாஸ் அகமதை சென்னைக்கு அழைத்துவந்து விசாரிக்கவும் என்ஐஏ அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். இதனால் தமிழகம் முழுவதும் இஸ்லாமியர்கள் மத்தியில் பதற்றம் அதிகரித்துள்ளது.

 

click me!