கதறிய 70 வயது பாட்டி.. விடாத பேரன்.. படுக்கபோட்டு என்ன செய்தார் தெரியுமா?

Published : Sep 22, 2022, 12:59 PM IST
 கதறிய 70 வயது பாட்டி.. விடாத பேரன்.. படுக்கபோட்டு என்ன செய்தார் தெரியுமா?

சுருக்கம்

சென்னை கொருக்குப்பேட்டை கருமாரியம்மன் நகர் 2வது தெருவை சேர்ந்தவர் விசாலாட்சி (70). வீட்டு வேலை செய்து வந்தார். இவரது மகள் அமுதா, செங்குன்றம் அடுத்த காந்திநகர் நேரு தெரு பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். 

வீடு கட்டுவதற்கு வாங்கிய பணத்தை தராத தகராறில் சுத்தியால் அடித்தும், பிளேடால் பாட்டியின் கழுத்தை அறுத்து படுகொலை செய்த பேரனை கைது செய்துள்ளனர்.

சென்னை கொருக்குப்பேட்டை கருமாரியம்மன் நகர் 2வது தெருவை சேர்ந்தவர் விசாலாட்சி (70). வீட்டு வேலை செய்து வந்தார். இவரது மகள் அமுதா, செங்குன்றம் அடுத்த காந்திநகர் நேரு தெரு பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது மகன் சசிகுமார் (28). இந்நிலையில் நேற்று இரவு விசாலாட்சி வீட்டில், வீடு கட்டுவதற்கு பணம் கொடுத்தது தொடர்பாக விசாலாட்சிக்கும், அமுதாவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. 

அப்போது அங்கு வந்த சசிகுமார், பாட்டியிடம் வாக்குவாதம் செய்துள்ளார். வாக்குவாதம் முற்றியதால் ஆத்திரமடைந்த சசிகுமார் சுத்தியால் தலையில் அடித்தும், பிளேடால் அவரது கழுத்தை அறுத்துவிட்டு அங்கிருந்து தப்பினார். ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த விசாலாட்சியை அக்கம்பக்கத்தினர் மீட்டு  சிகிச்சைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்தவிட்டதாக கூறியுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் விசாலாட்சியின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக  அதே மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சசிகுமாரை கைது செய்து விசாரணை நடத்தினர். பணம் கொடுங்கல் வாங்கல் பிரச்சனை காரணமாக  தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த சசிகுமார் பிளேடால் கழுத்தை அறுத்து பாட்டி விசாலாட்சியை கொலை செய்துள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்தது. பாட்டியை பேரன் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

PREV
click me!

Recommended Stories

முதலிரவில் அதிர்ச்சி.. திருமணமான 3 நாளில் விவாகரத்து கேட்ட புதுப்பெண்! நடந்தது என்ன?
ஆண்ட்டியின் அழகில் மயங்கிய கொரியர் ஊழியர்.. ரவுடியின் மனைவிக்கு விடாமல் காதல் மெசேஜ்.. இறுதியில் நடந்த அதிர்ச்சி