சென்னை விமான நிலையத்தில் ராஜநாகம்.. அசால்டா பையில் வைத்து தூக்கி வந்த பயணி.

By Ezhilarasan BabuFirst Published Aug 13, 2022, 11:58 AM IST
Highlights

தாய்லாந்து தலைநகர் பாங்காங்கில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட  ராஜநாகம், மலைப்பாம்பு, ஆமை, குரங்கு குட்டி போன்றவை மீண்டும் அந்த நாட்டுக்கே திருப்பி அனுப்பப்பட்டது.

தாய்லாந்து தலைநகர் பாங்காங்கில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட  ராஜநாகம், மலைப்பாம்பு, ஆமை, குரங்கு குட்டி போன்றவை மீண்டும் அந்த நாட்டுக்கே திருப்பி அனுப்பப்பட்டது. நேற்றிரவு தாய்லாந்து நாட்டில் இருந்து கடத்தி வரப்பட்ட கோடிய விஷ ஜந்துக்கள் கடந்திவரப்பட்ட நிலையில் சுங்கத்துறை அதிகாரிகள் இந்நடவடிக்கை எடுத்துள்ளனர்.

சென்னை விமான நிலையத்திற்கு பல்வேறு நாடுகளில் இருந்து பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர். அப்படி வரும்போது பல நாடுகளிலிருந்து பல பொருட்களை நாட்டிற்குள் சட்டவிரோதமாக கடத்தி வரும்  சம்பவங்களும் அரங்கேறி வருகிறது. பெரும்பாலானோர் தங்கம் மற்றும் வைரநகைகளை வெளிநாடுகளில் இருந்து கடத்தி வந்து சென்னை விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகளிடம் பிடிபடும் சம்பவங்கள் தொடர்கதையாகி வருகிறது. இதேவேளையில் போதைப் பொருட்கள் மற்றும் தடைசெய்யப்பட்ட வனவிலங்குகள், விஷ ஜந்துக்கள் அடிக்கடி விமானங்களில் கொண்டுவரப்படுகிறது.இது போன்ற செயல்களில் ஈடுபடுவோர் கைது செய்யப்பட்டு தண்டிக்கப்பட்டு வருகின்றனர்.

இதையும் படியுங்கள்: தொடர்ந்து மாணவிக்கு ஆபாச மெசேஜ்.. தொடக்கூடாத இடங்களில் கை வைத்து அசிங்கம்.. தமிழ் ஐயா சில்மிஷம்.

இந்நிலையில் சென்னை பன்னாட்டு விமான நிலையத்திற்கு தாய்லாந்து தலைநகர் பாங்காங்கில் இருந்து நேற்று இரவு விமானம் ஒன்று வந்தது, அதில் கடத்தல் பொருட்கள் இருப்பதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சுங்கத்துறை அதிகாரிகள் அந்த விமானத்தில் பயணித்த பயணிகளை ரகசியமாக கண்காணித்தனர், அப்போது ஒரு நபர் தாய்லாந்து நாட்டிற்கு சுற்றுலா விசாவில் சென்று திரும்பும் நிலையில் சந்தேகத்துக்கு இடமான முறையில் பேக் ஒன்று வைத்திருந்தார். அவரை தடுத்து அதிகாரிகள் விசாரித்தனர்.

இதையும் படியுங்கள்: ஆபிஸ் தோழன் கூப்பிட்டதால் ஓட்டலுக்கு போன இளம் பெண்.. ஃபுல்லா மது குடிக்க வைத்து இரவெல்லாம் உல்லாசம்.

அப்போது அந்த வாலிபர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார். பின்னர் அவர் வைத்திருந்த அந்த உடமைகளை சோதனை செய்தபோது அதில் பயங்கர விஷம் கொண்டா காட்டு ஜந்துக்கள், வன விலங்குகள் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனே வன விலங்கு அதிகாரிகளை வரவழைத்து விஷ ஜந்துக்களை ஆய்வு செய்தனர். அதில் ஒரு குட்டி குரங்கு, 15 ராஜநாகம் குட்டிகள்,  5 மலைப் பாம்பு குட்டிகள், இரண்டு ஆமைகள் இருந்தது தெரியவந்தது. 

பின்னர் அதை பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள் எந்தவித அனுமதியும் இல்லாமல் மருத்துவ சோதனையும் இல்லாமல் கொடிய விஷம் கொண்ட ஜந்துக்களை கடத்தி வந்த அவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அங்கிருந்து கடத்திவரப்பட்ட உயிரினங்களை மீண்டும் அந்த நாட்டிற்கே, அதே விமானத்தில் திருப்பி அனுப்பி வைத்தனர்.  

 

click me!