கடையின் பின்பக்க சுவரை துளையிட்டு உள்ளே நுழைந்த மர்ம நபர்கள் லாக்கரில் இருந்த தங்க நகைகள் அனைத்தும் கொள்ளையடிக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
கோவையில் ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையில் 25 கிலோ தங்க நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை காந்திபுரம் 100 அடி சாலையில் ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடை பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. நேற்றிரவு ஊழியர்கள் பணி முடித்து, வழக்கம் போல கடையை மூடி விட்டு சென்றுள்ளனர். இந்நிலையில், வழக்கம் போல கடை ஊழியர்கள் கடையை திறந்து உள்ளே சென்று பார்த்த போது அங்கிருந்த பொருட்கள் அனைத்து கலைந்து கிடந்தன.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
பின்னர் உள்ளே சென்று பார்த்த போது கடையின் பின்பக்க சுவரை துளையிட்டு உள்ளே நுழைந்த மர்ம நபர்கள் லாக்கரில் இருந்த தங்க நகைகள் அனைத்தும் கொள்ளையடிக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இந்த கொள்ளை சம்பவம் குறித்து உடனே கடையின் உரிமையாளருக்கும், போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையும் படிங்க;- School College Holiday: வெளியான மாஸ் அறிவிப்பு.. பள்ளி, கல்லூரிகளுக்கு டிசம்பர் 4ம் தேதி விடுமுறை.!
சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் நகைக்கடையில் இருந்து சுமார் 25 கிலோ தங்கம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து கடை ஊழியர்கள் மற்றும் அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளையும் ஆய்வு செய்து வருகின்றனர். கோவை நகரின் முக்கிய பகுதியில் கொள்யைடிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.