பேசுவதை நிறுத்தியதால் சக நண்பனின் கழுத்தை அறுத்த கல்லூரி மாணவன்; கல்லூரி வாகனத்தில் நடந்த கொலை முயற்சி

By Velmurugan s  |  First Published Nov 27, 2023, 6:47 PM IST

குளித்தலை அருகே தனியார் கல்லூரி வேனில் சென்ற பொறியியல் கல்லூரி மாணவனை எம்பிஏ மாணவன் சூரி கத்தியால் கழுத்தை அறுத்ததால் பரபரப்பு.


திருச்சி மாவட்டம், முசிறி பார்வதிபுரத்தைச் சேர்ந்தவர் நித்தீஷ் குமார் (வயது 19). இவர் கரூர் மாவட்டம் குளித்தலை அருகே புலியூரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் இன்ஜினியரிங் மூன்றாம் ஆண்டு பொறியியல் படித்து வருகிறார். இவர் முசிறியில் இருந்து கல்லூரிக்கு சொந்தமான வேனில் சென்று வருகிறார். வேனில் அவருடன் திருச்சி மாவட்டம் தொட்டியத்தைச் சேர்ந்த எம்பிஏ முதலாம் ஆண்டு மாணவன் அண்ணாமலை (21) என்பவரும் பயணித்து வந்துள்ளார்.

இந்நிலையில் இருவரும் சில நாட்களாக வேனில் பேசி கொள்ளாமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து அண்ணாமலை இன்று கல்லூரிக்கு வேனில் சென்றபோது நித்தீஷ் குமாரிடம் கேட்டுள்ளார். இதற்கு நீத்தீஷ்குமார் பதில் அளிக்காமல் இருக்கவே அப்போது தனது பையில் மறைத்து வைத்திருந்த சூரி கத்தியால் அவரது கழுத்தை அறுத்துள்ளார். மாணவன் நிதிஷ்குமாரின் அலறல் சத்ததை கேட்டு வேனில் பயணித்த சக மாணவர்கள் கூச்சலிடவே வேன் டிரைவர் உடனடியாக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு வேனில் வந்து நித்தீஷ்குமாரை சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

Tap to resize

Latest Videos

undefined

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

காயமடைந்த நிதீஷ்குமார் மாணவனுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். இதில் கழுத்து பகுதியில் 12 தையல்கள் போடப்பட்டுள்ளது. இது குறித்து தகவல் அறிந்த குளித்தலை போலீசார் எம் பி ஏ முதலாம் ஆண்டு மாணவன் அண்ணாமலையை குளித்தலை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

உறுப்பு தானம் செய்த இளைஞரின் உடலுக்கு ஆட்சியர், மருத்துவர்கள் மலர் தூவி மரியாதை; உறவினர்கள் நெகிழ்ச்சி

விசாரணையில் இருவரும் நண்பர்களாக பழகி வந்த நிலையில், ஒரு கட்டத்தில் அண்ணாமலை நித்திஷ்குமாரை காதலித்து வந்ததாகவும், அண்ணாமலையின் நடவடிக்கையை தெரிந்து கொண்ட நிதிஷ்குமார் அவரிடம் பழகியதை தவிர்த்து வந்துள்ளார். அண்ணாமலை தொடர்ந்து நித்தீஷ்குமாரிடம் வற்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கோபமடைந்த அண்ணாமலை இன்று கல்லூரி வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது என்னிடம் பேச மாட்டியா என்று நித்தீஷ்குமாரிடம் கேட்டு கோபமடைந்து தான் வைத்திருந்த சூரி கத்தியை எடுத்து  கழுத்து அறுத்ததாக போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.

click me!