மாணவிகளுக்கு ஆபாச படம் காட்டிய ஆசிரியர்... முகத்தில் கரி பூசி, செருப்பு மாலை போட்டு இழுத்துச்சென்ற மக்கள்!!

Published : Sep 30, 2022, 05:21 PM IST
மாணவிகளுக்கு ஆபாச படம் காட்டிய ஆசிரியர்... முகத்தில் கரி பூசி, செருப்பு மாலை போட்டு இழுத்துச்சென்ற மக்கள்!!

சுருக்கம்

 ஜார்கண்ட்டில் பள்ளி வகுப்பறைக்குள் மாணவிகளிடம் ஆபாச வீடியோக்களை காட்டி அவர்களிடம் பாலியல் சீண்டல் செய்த ஆசிரியரின் முகத்தில் கரி பூசி காலணி மாலை அணிவித்து தெருவில் இழுத்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

ஜார்கண்ட்டில் பள்ளி வகுப்பறைக்குள் மாணவிகளிடம் ஆபாச வீடியோக்களை காட்டி அவர்களிடம் பாலியல் சீண்டல் செய்த ஆசிரியரின் முகத்தில் கரி பூசி காலணி மாலை அணிவித்து தெருவில் இழுத்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜார்கண்ட் மாநிலத்தின் மேற்கு சிங்பூம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் பள்ளியில் ஆசிரியர் ஒருவர் வகுப்பறையில் மாணவிகளிடம் ஆபாச படம் காட்டியதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: சினிமாவை மிஞ்சிய பக்கா பிளான்.. ஓயாமல் டார்ச்சர் கொடுத்த 2வது மனைவியை கொலை செய்து விட்டு நாடகமாடிய கணவர்.!

மேலும் மாணவிகளிடம் பாலியல் சீண்டல் செய்ததாகவும் புகார் எழுந்தது. இதை அடுத்து அந்த ஆசிரியர் குறித்து காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்காததை அடுத்து அப்பகுதி மக்கள், ஆசிரியரின் முகத்தில் கரியை பூசி, காலணி மாலை அணிவித்து தெருவில் இழுத்துச் சென்றனர்.

இதையும் படிங்க: என் புருஷன நினைச்சு தான் நீங்க இரவில் தூங்கணும்.. மாணவிகளை மருமகளாக பாவித்த ஆசிரியைக்கு ஆப்பு..!

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், குற்றவாளியை மீட்டு, அழைத்துச் சென்றனர். இந்த நிலையில் அவரை உடனடியாக சிறையில் அடைக்கக் கோரி, கிராம மக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய காவல்துறையினர் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

PREV
click me!

Recommended Stories

Salem Crime: இரண்டு குழந்தைகளை பெற்றும் அடங்காத 23 வயது லலிதா.. அலறிய சேலம்.. நடந்தது என்ன?
Chennai Crime: ரயில் நிலையத்தில் சூட்கேஸில் தலையில்லாத சடலம்! கணவனை துண்டு துண்டாக வெட்டி கொன்றது ஏன்? சிக்கிய மனைவி பகீர்