மதுரையில் இந்து மக்கள் கட்சி நிர்வாகி படுகொலை; காவல்துறை குவிப்பு

By Velmurugan s  |  First Published Feb 1, 2023, 10:42 AM IST

மதுரை ஜெய்ஹிந்த்புரம் அருகே இந்து மக்கள் கட்சி நிர்வாகி மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளதால் அப்பகுதியில் காவல் துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.


மதுரை சோலை அழகுபுரம் பகுதியைச் சேர்ந்தவர்  மணிகண்டன்(வயது 40). இவர் ஜெய்ஹிந்த்புரம் அருகே உள்ள எம்.கே புரத்தில் நகைக்கடை நடத்தி வருகிறார். மேலும் இவர்  இந்து மக்கள் கட்சியில் தென்மாவட்ட துணை செயலாளராகவும் பொறுப்பு வகித்து வந்தார். இந்நிலையில் நேற்று இரவு கடை அருகே சென்று கொண்டு இருந்த போது  பின்னால் வந்த இரண்டு மர்ம நபர்கள் கல் மற்றும் அறிவாளால் மணிகண்டன் மீது கொடூரமாக தாக்குதல் நடத்தியுள்ளனர். 

திருவாரூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் வெட்டிப் படுகொலை; 7 பேர் கொண்ட கும்பல் வெறிச்செயல்

Tap to resize

Latest Videos

undefined

இதில் படுகாயமடைந்த மணிகண்டன்  உடனடியாக மீட்கப்பட்டு அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது தொடர்பாக ஜெய்ஹிந்தபுரம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

“கள ஆய்வில் முதலமைச்சர்” புதிய திட்டத்தை தொடங்கிவைக்க ரயிலில் பயணம் செய்யும் மு.க.ஸ்டாலின்..! ஏன் தெரியுமா.?

அரசியல் காரணங்களுக்காக படுகொலை நடத்தப்பட்டதா அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளனவா  என்பது குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தொடர்ந்து பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளதால் காவல் துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

click me!