எங்கமேலயே கேஸ் கொடுப்பியா.. இளம் பெண்ணை நிர்வாண படுத்தி தெருத் தெருவாக இழுத்துச் சென்று கொடூரம். 3 பேர் கைது.

Published : Oct 11, 2022, 10:45 AM IST
எங்கமேலயே கேஸ் கொடுப்பியா.. இளம் பெண்ணை நிர்வாண படுத்தி தெருத் தெருவாக இழுத்துச் சென்று கொடூரம். 3 பேர் கைது.

சுருக்கம்

வீட்டில் இருந்த பெண்ணை வெளியில் இழுத்து வந்து, அரை நிர்வாணப்படுத்தி தெருத் தெருவாக ஊர்வலம் இழுத்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  ஒரே குடும்பத்தைச் சேர்ந்த  நான்கு ஆண்கள் இக் கொடூரச் செயலில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது.  

வீட்டில் இருந்த பெண்ணை வெளியில் இழுத்து வந்து, அரை நிர்வாணப்படுத்தி தெருத் தெருவாக ஊர்வலம் இழுத்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த  நான்கு ஆண்கள் இக் கொடூரச் செயலில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது.
அந்தப் பெண் தங்கள் மீது காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார் என்பதற்காக அந்த பெண்ணை இவ்வாறு பழி தீர்க்கும் வகையில் அவர்கள் செயல்பட்டதும் தெரியவந்துள்ளது.

பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதை தடுக்க அரசும் காவல்துறையும் எத்தனை நடவடிக்கை எடுத்தும் குற்றங்கள் குறைந்தபாடில்லை. பெண்கள் சமூகத்தில் பல இடங்களில் பல வகைகளில் வஞ்சிக்கப்படுகின்றனர். இந்த வரிசையில் தங்களுக்கு எதிராக காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார் என்பதற்காக ஜாமீனில் வெளியில் வந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அண்ணன் தம்பிகள் ஒரு பெண்ணை நிர்வாணப்படுத்தி நடுவீதியில் அழைத்துச் சென்று மானபங்கப்படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படியுங்கள்: செல்போன் எனக்கு வேணும்.. கணவன் செல்போன் வாங்கி தராததால் மனைவி எடுத்த விபரீத முடிவு

முழு விபரம் பின்வருமாறு:- மத்திய பிரதேச மாநிலம் போபால் சத்னா மாவட்டம் கேரா கிராமத்தைச் சேர்ந்த  இளம் பெண் ஒருவர் தனிமையில் வசித்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்த ரிஷி பட்டேல், சிவகுமார் பட்டேல், மகேந்திர பட்டேல் மற்றும் ஆகியோர் கடந்த மாதல் குடித்துவிட்டு அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்று ரகளை  செய்ததாக தெரிகிறது. அதனையடுத்து அந்தப் பெண் 100க்கு அழைத்து அந்த இளைஞர்கள் மீது புகார் கொடுத்தார். இதையடுத்து போலீசார் அவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

ஆனால் அவர்கள் மூவரும் சில நாட்களில் ஜாமீனில் விடுதலை ஆயினர், இந்நிலையில் கடந்த சனிக்கிழமை அந்தப்பெண்ணின் வீட்டிற்குள் புகுந்த அவர்கள் அந்தப் பெண்ணை வெளியில் இழுத்துவந்து நிர்வாண படுத்தி, அந்தப் பெண்ணை தெருத்தெருவாக பலமணிநேரம் இழுத்துச் சென்றனர். இதில் அந்தப் பெண் அவமானம் தாங்க முடியாமல் கண்ணீர் விட்டு கதறினார், ஆனால் அந்த கிராம மக்கள் ஒருவர் கூட இந்த சம்பவத்தை தட்டிக் கேட்கவில்லை, அனைவரும் வாய்மூடி வேடிக்கை பார்த்தனர். அந்த மூவரும் அந்தப் பெண்ணை இடையிடையே தாக்கி சித்திரவதை செய்தனர்.

இதையும் படியுங்கள்: திருமணம் ஆனவருடன் பாலியல் உறவு கொண்ட பெண்.. நீதி கேட்ட பெண்ணுக்கு கோர்ட் கொடுத்த அதிர்ச்சி தீர்ப்பு !

இதை அங்கிருந்தவர்கள் வீடியோ எடுத்து அதை வெளியிட்டனர். இந்த கொடூரம் தொடர்பாக அந்த பெண்ணின் உறவினர்கள் அந்த நபர்களை தடுத்து நிறுத்த முயற்சித்தனர் ஆனால் அவர்களது அதை பொருட்படுத்தவில்லை, வெரும் பாவாடை மற்றும் ஜாக்கெட்டுடன் அந்த பெண் மானபங்கம் செய்யப்பட்டுள்ள இந்த சம்பவம் வைரலாகி வருகிறது. தற்போது இந்த விஷயம் தொடர்பாக போலீஸ் அதிகாரிகள் தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்துள்ளதுடன், இக் கொடூரச் செயலில் ஈடுபட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர். 
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Sathankulam Case: இந்தியாவையே உலுக்கிய தீர்ப்பு! 9 போலீசாருக்கு மரண தண்டனை.. நடந்தது என்ன?
பயங்கரவாத தாக்குதல் நடத்த சதி... லஷ்கர்-இ-தொய்பா பயங்கர ஸ்கெட்ச்..! டெல்லியில் பரபரப்பு..!