செல்போன் எனக்கு வேணும்.. கணவன் செல்போன் வாங்கி தராததால் மனைவி எடுத்த விபரீத முடிவு

Published : Oct 10, 2022, 09:11 PM ISTUpdated : Oct 10, 2022, 09:14 PM IST
செல்போன் எனக்கு வேணும்.. கணவன் செல்போன் வாங்கி தராததால் மனைவி எடுத்த விபரீத முடிவு

சுருக்கம்

கணவர் செல்போன் வாங்கி தராததால் மன உளைச்சலில் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அடுத்த படப்பை பெரியார் காலணியில் வசித்து வருபவர் முருகன். முருகன் கார்பெண்டர் வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி சரஸ்வதி வ/26. இவர்களுக்கு ஐந்து வயது ஒரு மகன் உள்ளார். இந்நிலையில் சரஸ்வதி தன் கணவரிடம் தொடர்ந்து செல்போன் வாங்கி தரச் சொல்லி வற்புறுத்தியுள்ளார். 

கணவர் செல்போன் வாங்கி தர மறுத்து தகாத வார்த்தையில் திட்டி விட்டு வீட்டை விட்டு வெளியேறி சிறிது நேரம் கழித்து வீட்டுக்கு வந்து பார்த்த பொழுது பெட் ரூம் உள்ளே தாலிட்டு இருந்துள்ளது. கதவை வேகமாக தட்டியும் கதவு திறக்கப்படாததால் சந்தேகம் அடைந்த முருகன் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த பொழுது சரஸ்வதி மின்விசிறியில் தனக்குத்தானே தூக்கிட்டு தொங்கிய நிலையில் இருந்துள்ளார்.

இதையும் படிங்க..வெறும் 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி.. தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

அவரை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு பரிசோதித்த மருத்துவர் ஏற்கனவே சரஸ்வதி இறந்து விட்டதாக கூறியுள்ளார். பிரதேசத்தை கைப்பற்றி இச்சம்பம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர் காவல்துறையினர்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு குன்றத்தூர் அருகே செல்போனை விளையாடிக் கொண்டிருந்த சிறுவனை தந்தை கண்டித்ததை தாங்க முடியாமல் சிறுவன் தூக்கில் கொண்ட சம்பவத்தில் , மகன் உயிரிழப்புக்கு தான் காரணம் என கூறி கடிதம் எழுதி வைத்துவிட்டு தந்தையும் அதே தூக்கில் தொங்கி உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி அடங்குவதற்குள் இதன் அருகிலேயே இச்சம்பவம் நடைபெற்று உள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இதையும் படிங்க..ஆட்சிக்கு வந்து ஒன்றரை வருஷம் ஆச்சு.. தீபாவளி வாழ்த்து சொல்லவே இல்லை.! திமுகவை வம்புக்கு இழுக்கும் பாஜக

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

நான் உனக்கு போதாதா! என் பொண்ணு கேக்குதா.. ஆத்திரத்தில் 46 வயது ஆன்டி.. அலறிய சூர்ய பிரதாப் சிங்
சார்.. நான் உங்க ஸ்டூடண்ட்ஸ்.! இப்படியெல்லாம் பண்ணாதீங்க! எவ்வளவு சொல்லியும் கேட்காத ஆசிரியருக்கு செருப்பு மாலை