கள்ளக்காதலியுடன் உல்லாசமாக இருக்க போட்டா போட்டி.. ஆத்திரத்தில் நண்பனை குத்திக்கொன்ற அதிர்ச்சி சம்பவம்.!

By vinoth kumar  |  First Published Jul 1, 2022, 11:32 AM IST

அந்த பெண்ணுடன் ஏற்கனவே சதீசுக்கும் கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. இதனால் முத்துபாண்டியும் அங்கு வருவதை பிடிக்காத சதீஷ், அவளுடன் தொடர்பை விட்டுவிடும்படி அவரை கண்டித்து, பெண்ணின் சகோதரர்களிடம் சொல்லிவிடுவேன் என மிரட்டியுள்ளார். 


திருச்சியில் ஒரே பெண்ணுடன் கள்ளத்தொடர்பில் இருந்த நண்பர்களிடையே ஏற்பட்ட மோதல் கொலையில் முடிந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

திருச்சி அடுத்த திருவெறும்பூர் அடுத்த கக்கன் காலனியை சேர்ந்தவர் சதீஷ் (எ) சக்திகுமார்(34). வேன் டிரைவர். கருத்து வேறுபாடு காரணமாக இவரது மனைவி விவாகரத்து பெற்று 3 ஆண்டுக்கு முன் பிரிந்து சென்று விட்டார். இவரது நண்பர், திருவெறும்பூர் காந்திநகரை சேர்ந்த முத்துப்பாண்டி (32). கார் டிரைவர். திருமணமாகாதவர். இவருக்கு, சதீஷ் வீட்டருகே வசிக்கும் ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே கள்ளக்காதலாக மாறியுள்ளது.  இதனால் முத்துப்பாண்டி, அடிக்கடி அந்த பெண்ணின் வீட்டுக்கு வந்து சென்றார். 

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க;- வாயில் சரக்கை ஊற்றி நர்ஸை புதரில் வைத்து நாசம் செய்த கொடூரன்கள்.. தாயிடம் சொல்லி கதறிய மகள்..!

அந்த பெண்ணுடன் ஏற்கனவே சதீசுக்கும் கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. இதனால் முத்துபாண்டியும் அங்கு வருவதை பிடிக்காத சதீஷ், அவளுடன் தொடர்பை விட்டுவிடும்படி அவரை கண்டித்து, பெண்ணின் சகோதரர்களிடம் சொல்லிவிடுவேன் என மிரட்டியுள்ளார். ஆனால், இதனை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் தொடர்ந்து அந்த பெண்ணின் வீட்டுக்கு வந்து சென்றார். 

இதையும் படிங்க;- முதலிரவு ரூமுக்குள் நுழைந்த உடனே மிருகத்தனமாக பாலியல் தொல்லை.. அலறியபடி மயங்கி விழுந்த மணம்பெண்..!

இந்நிலையில், நள்ளிரவு அந்த பெண்ணின் வீட்டுக்கு முத்துப்பாண்டி சென்றார். இதை தனது வீட்டு வாசலில் நின்று பார்த்த சதீஷ், அவரை அழைத்து, இங்கு வராதே என்று எச்சரித்தும் நீ கேட்கவில்லை. அந்த பெண்ணின் அண்ணன்களிடம் சொல்லிவிட்டேன் என்று கூறியுள்ளார். இதனால், இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.  இதில் ஆத்திரமடைந்த முத்துபாண்டி, மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சதீசை சரமாரி குத்தியுள்ளார். இதில், ரத்த வெள்ளத்தில் சதீஷ் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். இதனையடுத்து, கொலை செய்த கத்தியுடன் முத்துப்பாண்டி  திருவெறும்பூர் காவல் நிலையத்தில் சரணடைந்தார். 

இதையும் படிங்க;- பிரபல ஒட்டல் கழிவறைக்கு சென்ற பெண்.. இளைஞர் செய்த காரியத்தால் அதிர்ச்சி.. இறுதியில் என்ன நடந்தது தெரியுமா?

click me!