Andhra Pradesh: ஆந்திராவில் ஆட்டோ மீது மின் கம்பி விழுந்து விபத்து..! 8 பேர் உடல் கருகி பலி

Published : Jun 30, 2022, 09:54 AM ISTUpdated : Jun 30, 2022, 11:47 AM IST
Andhra Pradesh: ஆந்திராவில் ஆட்டோ மீது மின் கம்பி விழுந்து விபத்து..! 8 பேர் உடல் கருகி பலி

சுருக்கம்

ஆந்திராவில் விவசாய பணிக்கு ஆட்டோவில்  சென்று கொண்டிருந்த 8 பேர் மின் கம்பி அறுந்து விழுந்ததில் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பலியான பரிதாபம் ஏற்பட்டுள்ளது.

ஆட்டோ மீது விழுந்த மின் கம்பி

ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள ஸ்ரீ சத்ய சாய் மாவட்டத்தில் தினசரி கூலித் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளை ஆட்டோவில் ஏற்றி செல்வது வழக்கம் அந்த வகையில்,  சத்ய சாய் மாவட்டத்தில் இருந்து தாடிமரி மாவட்டத்தில் இருந்து  சில்லகொண்டையாபள்ளியில் அருகே ஆட்டோ சென்று கொண்டிருந்துள்ளது. அப்போது அந்த ஆட்டோ மீது உயர் மின் அழுத்தம் கொண்ட மின் கம்பி அறுந்து விழுந்துள்ளது.

சமூக வலைதளம் மூலம் பழகி மாணவியை கற்பழித்த இளைஞர்...! நிர்வாண படத்தை காட்டி பணம் கேட்டு மிரட்டல்

8 பேர் உடல் கருகி பலி

அந்த கம்பியில் இருந்து மின்சாரம் ஆட்டோவில் பாய்ந்துள்ளது. இதில் ஆட்டோவில்பயணம் செய்த 8 பேர் மீதும் தீயானது வேகமாக பரவியுள்ளது. ஆட்டோவில் பயணித்தவர்கள் சுதாரிப்பதற்க்குள் 8 பேர் மீதும் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிர் இழந்துள்ளனர். சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவம இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், மின்கம்பி அறுந்து ஏற்பட்ட விபத்தில் 8 பேர் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

இதையும் படியுங்கள்

பல் துலக்காமல் முத்தம் கொடுக்காதீங்க.. கண்டித்த மனைவியால் காண்டான கணவர்.. இறுதியில் நடந்த பயங்கரம்..!

 

PREV
click me!

Recommended Stories

அரைகுறை ஆடையுடன் அமர்ந்திருந்த ஸ்ரேயா! கதறியும் விடாத தந்தை, மகன்! இறுதியில் நடந்த அதிர்ச்சி!
திருமணமான பெண்ணுடன் பழகுவதை நிறுத்திடு! கண்டித்த வேல்குமார்! நடுரோட்டில் கதறவிட்ட அதிர்ச்சி!