எல்லைமீறிய காமவெறி, அடங்காத கள்ளக்காதல்...!! கொன்று வீட்டுக்கு பின்னால் புதைத்த கொடூரம்...!!

Published : Jan 04, 2020, 02:25 PM ISTUpdated : Jan 04, 2020, 03:07 PM IST
எல்லைமீறிய காமவெறி,  அடங்காத கள்ளக்காதல்...!!  கொன்று வீட்டுக்கு பின்னால் புதைத்த கொடூரம்...!!

சுருக்கம்

வீட்டில் கணவன் இல்லாதபோது மகேஸ்வரியும் கார்த்திகேயனும் உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர். இந்நிலையில் சென்னையில் வேலை முடிந்ததையடுத்து  

மனைவியை விடாமல் தொல்லை கொடுத்து வந்த கள்ளக்காதலனை கணவன் மனைவி இருவரும் சேர்ந்து அடித்துக் கொலை செய்து வீட்டிற்கு பின்புறம் புதைத்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .  சென்னை அனகாபுத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திகேயன் ,  இவர் கடந்த டிசம்பர் மாதம் 18ஆம் தேதி முதல் மாயமானார் ,  கார்த்திகேயனை பல இடங்களில் தேடியும் அவரை தொடர்புகொள்ள முடியாததால் தங்கள் மகனைக் காணவில்லை என அவரது பெற்றோர்கள் போலீஸில் புகார் கொடுத்தனர் .  இந்நிலையில்  கார்த்திகேயன் தொலைபேசி எண்ணிற்கு வந்த அழைப்புகளையும்,  மற்றும் அவரது  செல்போன் சிக்னலையும் போலீஸார் ஆராய்ந்ததில் அவர் ஆந்திராவில் இருப்பது பொல்  அவரின்  செல்போன்  சிக்னல் காண்பித்தது. 

இதனையடுத்து  அவரை கடைசியாக தொடர்பு கொண்ட  எண்ணை ஆராய்ந்தபோது அது ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த மகேஸ்வரி என்பது தெரியவந்தது அந்த பெண்ணை தொடர்பு கொண்ட போலீசார் கார்த்திகேயன் குறித்து  விசாரித்தனர் ஆனால் அந்தப் பெண் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்ததால் சந்தேகமடைந்த போலீசார் ஆந்திரா மாநிலம் சென்று அவரையும் அவரது  கணவர் சிவக்குமாரையும் அலேக்காக சென்னைக்கு தூக்கிவந்து விசாரித்தனர்.  அப்போது போலீசார் சந்தேகித்தபடியே  கார்த்திகேயன் கொலை செய்யப்பட்ட விஷயத்தை கணவன் மனைவி இருவரும் கக்கினர்.  இது குறித்து தகவல் தெரிவித்த போலீசார்,  சிவகுமாரும் மகேஸ்வரியும்,  ஆந்திர மாநிலத்தை சேர்ந்த தம்பதியர்,   இவர்கள் சில மாதங்களுக்கு முன்பு சென்னையில் தங்கி வேலை செய்து வந்தனர் .  அப்போது கார்த்திகேயனுக்கும் மகேஸ்வரக்கும்  இடையே தொடர்பு ஏற்பட்டு அது கள்ளக்காதலாக மாறியது, வீட்டில் கணவன் இல்லாதபோது மகேஸ்வரியும் கார்த்திகேயனும் உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர். இந்நிலையில்  சென்னையில் வேலை முடிந்ததையடுத்து  

மனைவி மகேஸ்வரியை  அழைத்துக்கொண்டு சிவகுமார் ஆந்திர மாநிலத்திற்கு சென்று விட்டார்,  ஆனால் மகேஸ்வரியை விடாமல் கார்த்திகேயன் தொலைபேசியில் அழைத்து தொந்தரவு செய்து வந்ததுடன்,  அவரை பார்க்க வேண்டுமென தொல்லை  கொடுத்து வந்துள்ளார்.   இந்த  விவகாரம் கணவன் சிவக்குமாருக்கு  தெரிய வந்ததையடுத்து அவர் மாதேஸ்வரியிடம் கேட்க,   கணவனிடம் இருந்து தப்பிப்பதற்காக  கார்த்திகேயன் என்பவர் தன்னை தவறாக முறையில் வீடியோ எடுத்து வைத்து மிரட்டுகிறார் என கணவனிடம்  மாற்றி கூறியுள்ளார்.  இதில் ஆத்திரமடைந்த கணவன் சிவகுமார் மனைவியின் மூலம் தந்திரமாகப் பேசி கார்த்திகேயனை ஆந்திராவுக்கு வரவழைத்துள்ளார்.  அதை நம்பி ஆந்திராவுக்கு சென்ற கார்த்திகேயனை கணவன் மனைவி இருவரும் சேர்ந்து அடித்துக்கொலை செய்து வீட்டுக்கு பின்புறம் புதைத்துள்ளனர். இருவரும் கொடுத்த தகவலின் அடிப்படையில் கார்த்திகேயனின்  உடலை கைப்பற்றி உடல்கூறு ஆய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.   இந்த விவகாரம் தொடர்பாக மேலும்  இருவரையும்  விசாரித்து வருகிறோம் என  போலீசார் தெரிவித்துள்ளனர்..

PREV
click me!

Recommended Stories

காட்டுப்பகுதியில் கள்ளக்காதல் ஜோடி! அந்த நேரத்தில் வந்த போன் கால்! கடுப்பான வெங்கடேஷ்! 600 அடி பள்ளத்தில் சுமதி!
அலறி கூச்சலிட்ட 65 வயது பாட்டி.! கதறியும் விடாத 45 வயது மும்மூர்த்தி.! நடந்தது என்ன?