பிரபல ரவுடி துடிக்கத் துடிக்க வெட்டிப் படுகொலை..! முன்விரோதத்தில் வெறிச்செயல்..!

Published : Jan 04, 2020, 11:58 AM ISTUpdated : Jan 04, 2020, 12:02 PM IST
பிரபல ரவுடி துடிக்கத் துடிக்க வெட்டிப் படுகொலை..! முன்விரோதத்தில் வெறிச்செயல்..!

சுருக்கம்

திருச்செங்கோடு அருகே பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருக்கும் ரவுடி ஒருவர் கொலை செய்யப்ட்டுள்ளார்.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே இருக்கும் சூரியம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் நொண்டி தனபால் என்கிற தனபால்(36). பிரபல ரவுடியான இவர் மீது பல்வேறு கொலை,கொள்ளை,வழிப்பறி போன்ற வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. கடந்த 2018 ம் ஆண்டு குப்பன் என்கிற நிதிநிறுவன அதிபர் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டிருந்தார். அதுதொடர்பான வழக்கில் முதல் குற்றவாளியாக தனபால் சேர்க்கப்பட்டு சிறையில் இருந்தார். 

அதற்கு முன்பாக வளத்தி மோகன் என்கிற ரவுடியை கொலை செய்ததாகவும் தனபால் கைதாகி இருந்தார். இதுதொடர்பான வழக்குகளில் தற்போது அவர் ஜாமின் பெற்றுள்ளார். இந்தநிலையில் நேற்று காலையில் சூரியம்பாளையம் அருகே இருக்கும் ஒரு இறைச்சி கடையில் இரண்டு பேருடன் சேர்த்து தனபால் மது அருந்திக்கொண்டிருந்தார். அப்போது திடீரென அவரது அலறல் சத்தம் கேட்டுள்ளது. கடையின் பின்புறம் சென்று உரிமையாளர் பார்த்த போது தனபால் ரத்தவெள்ளத்தில் உயிரிழந்து கிடந்தார். அவருடன் இருந்தவர்கள் தப்பி சென்றுள்ளனர்.

அதைக்கண்டு அதிர்ச்சியடைந்த கறிக்கடை உரிமையாளர் உடனடியாக கடையை அடைத்துவிட்டு ஓடிவிட்டார். அங்கிருந்தவர்கள் இந்த சம்பவம் குறித்து காவல்துறைக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த பள்ளிபாளையம் காவலர்கள் பலியான தனபாலனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். கொலை வழக்கு பதிவு செய்திருக்கும் காவல்துறையினர் விசாரணை நடத்தி கொலையாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர். பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருக்கும் நிலையில் பிரபல ரவுடி கொலையான சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

PREV
click me!

Recommended Stories

காட்டுப்பகுதியில் கள்ளக்காதல் ஜோடி! அந்த நேரத்தில் வந்த போன் கால்! கடுப்பான வெங்கடேஷ்! 600 அடி பள்ளத்தில் சுமதி!
அலறி கூச்சலிட்ட 65 வயது பாட்டி.! கதறியும் விடாத 45 வயது மும்மூர்த்தி.! நடந்தது என்ன?