கொலையில் முடிந்த கள்ளக்காதல்.. ஜாமீனில் வெளியே வந்த இளைஞர் அவமானத்தால் செய்த காரியம்..!

Published : Sep 09, 2021, 08:43 PM IST
கொலையில் முடிந்த கள்ளக்காதல்.. ஜாமீனில் வெளியே வந்த இளைஞர் அவமானத்தால் செய்த காரியம்..!

சுருக்கம்

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அடுத்த பனையபுரத்தை சேர்ந்தவர் வேன் ஓட்டுநர் லியோபால்( 33). இவரது மனைவி சுஜித்ராமேரி (24). 2 குழந்தைகள் உள்ளனர். பக்கத்து வீட்டைச் சேர்ந்த லியோபால் நண்பரான ராதாகிருஷ்ணன் (20) என்பவர் திண்டிவனத்தில் உள்ள கல்லூரியில் படித்து வருகிறார். இந்நிலையில், ராதாகிருஷ்ணனுக்கும் சுஜிதாமேரிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியுள்ளது.

கள்ளக்காதல் விவகாரத்தில் கைதாகி ஜாமீனில் வெளியே வந்த இளைஞர் செஞ்சி ராஜகிரி கோட்டை மலை அடிவாரத்தில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அடுத்த பனையபுரத்தை சேர்ந்தவர் வேன் ஓட்டுநர் லியோபால்( 33). இவரது மனைவி சுஜித்ராமேரி (24). 2 குழந்தைகள் உள்ளனர். பக்கத்து வீட்டைச் சேர்ந்த லியோபால் நண்பரான ராதாகிருஷ்ணன் (20) என்பவர் திண்டிவனத்தில் உள்ள கல்லூரியில் படித்து வருகிறார். இந்நிலையில், ராதாகிருஷ்ணனுக்கும் சுஜிதாமேரிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியுள்ளது. 

இந்த விவகாரம் நாளடைவில் கணவர் லியோபாலுக்கு தெரிய வந்ததையடுத்து இருவரையும் கண்டித்துள்ளார். அப்படி இருந்த போதிலும் அவர்களது கள்ளக்காதல் தொடர்ந்தது. கடந்த  பிப்ரவரி 4ம் தேதி சுஜித்ராமேரி, கள்ளக்காதலனுடன் சேர்ந்து, இரும்பு கம்பியால் தாக்கி கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு தோட்டத்தில் புதைத்தனர். இதனையடுத்து, கேரளாவில் பதுங்கியிருந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர், சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில், கடந்த ஒரு மாதத்துக்கு முன் ஜாமீனில் வெளியே வந்த ராதாகிருஷ்ணன் பெங்களூருவில் உள்ள தனது அக்கா வீட்டில் தங்கிய இருந்துள்ளார். பின்னர், கடந்த 4 நாட்களுக்கு முன்பு வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு வந்துள்ளார். இந்நிலையில், அவர் செஞ்சி ராஜகிரி கோட்டை அருகே உள்ள சிவன் கோவிலில் இளைஞர் விஷம் குடித்து தற்கொலை செய்துள்ளார் என்பது தெரியவந்தது. 

PREV
click me!

Recommended Stories

Salem Crime: இரண்டு குழந்தைகளை பெற்றும் அடங்காத 23 வயது லலிதா.. அலறிய சேலம்.. நடந்தது என்ன?
Chennai Crime: ரயில் நிலையத்தில் சூட்கேஸில் தலையில்லாத சடலம்! கணவனை துண்டு துண்டாக வெட்டி கொன்றது ஏன்? சிக்கிய மனைவி பகீர்