உல்லாசத்துக்கு இடையூறு.. பெற்ற மகனுக்கு சூடுவைத்து துன்புறுத்திய காமெறி பிடித்த தாய்..!

By vinoth kumarFirst Published Sep 9, 2021, 11:32 AM IST
Highlights

இந்த விவகாரம் நாளடைவில் சிறுவன் பாலச்சந்திரனுக்கு தெரியவந்தது. இவர்களின் கள்ளக்காதல் பற்றி சிறுவன் பாலசந்தர் அக்கம், பக்கத்தில் உள்ளவர்களிடம் கூறி வந்ததாக தெரிகிறது. இதை கேள்விப்பட்ட சாந்திதேவி தான் பெற்ற மகன் என்றும் பாராமல் பாலசந்தரை அடிக்கடி சூடு வைத்து அடித்து கொடுமைப்படுத்தி வந்துள்ளார். 

கடலூரில் உல்லாசத்துக்கு இடையூறாக இருந்த மகனை சூடு வைத்து துன்புறுத்திய காமவெறி பிடித்த தாய் மற்றும் கள்ளக்காதலனை கைது செய்துள்ளனர். 

கடலூர் சூரப்பன்நாயக்கன்சாவடியை சேர்ந்தவர் ஹரிகிருஷ்ணன் மனைவி சாந்திதேவி (35). இவர்களுக்கு பாலசந்திரன் என்ற 12 வயது மகன் உள்ளான். சாந்தி தேவியின் கணவர் ஹரிகிருஷ்ணன் கடந்த ஆண்டு உயிரிழந்துவிட்ட நிலையில் வீட்டில் தனியாக மகனுடன் வசித்து வருகிறார். இந்நிலையில், சுலைமான் முகமது என்பவர் எஸ்என்சாவடியில் என்ன சாந்திதேவி இல்லத்திற்கு வந்துள்ளார். அப்போது, வீட்டில் பில்லி, சூனியம் இருப்பதாக கூறி அவற்றை எடுத்து விடுகிறேன் என்று கூறியுள்ளார். இதில், இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. யாரும் இல்லாத நேரத்தில் இருவரும் அடிக்கடி உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். 

இந்நிலையில், இந்த விவகாரம் நாளடைவில் சிறுவன் பாலச்சந்திரனுக்கு தெரியவந்தது. இவர்களின் கள்ளக்காதல் பற்றி சிறுவன் பாலசந்தர் அக்கம், பக்கத்தில் உள்ளவர்களிடம் கூறி வந்ததாக தெரிகிறது. இதை கேள்விப்பட்ட சாந்திதேவி தான் பெற்ற மகன் என்றும் பாராமல் பாலசந்தரை அடிக்கடி சூடு வைத்து அடித்து கொடுமைப்படுத்தி வந்துள்ளார். மேலும் இது பற்றி வெளியில் சொன்னால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டியதாக தெரிகிறது. இதனால் பயந்து போன பாலசந்தர் இது பற்றி பேசுவதை நிறுத்தி விட்டான். 

இதுகுறித்து சிறுவன் பாலச்சந்திரன் பக்கத்து வீட்டுக்காரர்களிடம் என்னை வேறு எங்கேயாவது கொண்டு போய்விட்டு விடுங்கள் என்று கதறி அழுதுள்ளார். இதனையடுத்து, அக்கம், பக்கத்தினர் திருப்பாதிரிப்புலியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனையடுத்து, சிறுவன் பாலச்சந்திரனை விசாரணை செய்ததில் கள்ளக்காதல் விவகாரம் தெரியவந்தது. பின்னர், போலீசார் வழக்குப்பதிவு செய்து சாந்திதேவி மற்றும் கள்ளக்காதலன் சுலைமான் முகமதுவை கைது செய்துள்ளனர். மேலும் சிறுவனை மீட்டு கடலூரில் உள்ள காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

click me!