சேலத்தில் பயங்கரம்.. கள்ளக்காதல் விவகாரத்தில் பெண் ரத்த வெள்ளத்தில் கொடூரமாக குத்திக்கொலை.. கள்ளக்காதலன் கைது

Published : Jul 13, 2021, 11:26 AM ISTUpdated : Jul 13, 2021, 11:31 AM IST
சேலத்தில் பயங்கரம்.. கள்ளக்காதல் விவகாரத்தில் பெண் ரத்த வெள்ளத்தில் கொடூரமாக குத்திக்கொலை.. கள்ளக்காதலன் கைது

சுருக்கம்

சேலத்தில் கள்ளக்காதல் விவகாரத்தில் பெண் கொடூரமாக குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

சேலத்தில் கள்ளக்காதல் விவகாரத்தில் பெண் கொடூரமாக குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

சேலம் மாவட்டம் கருப்பூர் அருகே கொல்லப்பட்டி புதூரைச் சேர்ந்த ராஜேந்திரன் மனைவி சித்ரா(42). ஒரு மகள், மகன் உள்ளனர். குடும்ப தகராறில் 8 ஆண்டுகளாக, சித்ரா, பிள்ளைகளுடன் தனியாக வசித்து வந்தார். வீட்டின் அருகே மளிகை கடை நடத்தி வந்தார். மகள், தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். 

இந்நிலையில், மூன்று ஆண்டுகளுக்கு முன் சித்ராவுக்கு அழகாபுரத்தைச் சேர்ந்த ஏழுமலை (42) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. ஏழுமலைக்கு திருமணமாகி இரு குழந்தைகள் உள்ள நிலையில், சித்ராவுடன் கள்ளத்தனமாக குடும்பம் நடத்தி வந்தார். இதையறிந்த சித்ரா மகள் ஜெயசித்ரா(20) ஏழுமலையை வீட்டுக்கு வரக்கூடாது என கண்டித்தார். 

நேற்று காலை சித்ரா வீட்டுக்கு ஏழுமலை வந்தபோது, இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த ஏழுமலை மளிகை கடையில் இருந்த கத்தியை எடுத்து, சித்ராவின் கழுத்து, தலையில் குத்தி விட்டு தப்பினார். ரத்த வெள்ளத்தில் சரிந்த சித்ரா சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சித்ராவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து தலைமறைவாக இருந்த ஏழுமலையை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

PREV
click me!

Recommended Stories

போதையில் இளைஞர்கள் அட்டூழியம்.. பள்ளி மாணவிகள் பின்னே சென்று அட்ராசிட்டி.. இறுதியில் நடந்த ட்விஸ்ட்
ரூ.2000 கொடுத்தா இளம்பெண்களுடன் ஜாலியாக இருக்கலாம்.. போலீஸ் என்று தெரியாமல் வசமாக சிக்கிய கும்பல்