ஆட்டோ ஓட்டுனரிடம் ஐபோனை பறித்த போலீஸ்.. பீர் பாட்டிலால் கழுத்தை அறுத்து தற்கொலை.. மனைவி பகீர் புகார்.

By Ezhilarasan BabuFirst Published Jul 13, 2021, 9:24 AM IST
Highlights

மேலும் இருவரையும் புகைப்படம் எடுத்துவிட்டு முகவரியை கேட்டபோது காவலருடன் பாக்கியராஜ் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அப்போது திடீரென கையில் வைத்திருந்த பீர் பாட்டிலால் பாக்கியராஜ் கழுத்தை அறுத்து கொண்டதாக கூறப்படுகிறது. 

புதிதாக வாங்கிய ஐபோனை காவலர் பறித்ததால் மனமுடைந்து தனது கணவர் கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்டதாக உயிரிழந்தவரின் மனைவி குற்றம்சாட்டியுள்ளார். சென்னை அம்பத்தூர் எஸ்டேட் ஐசி.எப் காலனி பகுதியை சேர்ந்தவர் பாக்கியராஜ்(32). ஆட்டோ ஓட்டுனரான இவருக்கு அபிராமி என்ற மனைவியும் 3 வயதில் குழந்தையும் உள்ளது. இந்நிலையில் பாக்கியராஜ் நேற்று காலை 11 மணியளவில் தனது நண்பர் பிரதீப்புடன் ஆட்டோவில் அயப்பாக்கம் பகுதியிலுள்ள ஜேஹூமர் மேல்நிலை பள்ளி அருகே உள்ள காலியான பகுதிக்கு சென்று மது அருந்தியதாக கூறப்படுகிறது. அப்போது அவ்வழியாக வந்த ரோந்து காவலர் சந்தோஷ் பொது இடத்தில் ஏன் குடிக்கீறீர்கள் என கேட்டதுடன், உடனடியாக கிளம்புமாறு சொன்னதாக கூறப்படுகிறது. 

மேலும் இருவரையும் புகைப்படம் எடுத்துவிட்டு முகவரியை கேட்டபோது காவலருடன் பாக்கியராஜ் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அப்போது திடீரென கையில் வைத்திருந்த பீர் பாட்டிலால் பாக்கியராஜ் கழுத்தை அறுத்து கொண்டதாக கூறப்படுகிறது. ரத்த வெள்ளத்தில் கிடந்த பாக்கியராஜை காவலர் மற்றும் நண்பர் பிரதீப் இணைந்து தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேல் சிகிச்சைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பாக்கியராஜை கொண்டு சென்ற போது இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

பாக்கியராஜ் தற்கொலை செய்து கொண்டதாக அவரது மனைவியான அபிராமிக்கு போலீசார் மதியம் 1 மணியளவில் தகவல் கூறியுள்ளனர். 
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த பாக்கியராஜின் மனைவி அபிராமி உட்பட உறவினர்கள் பலர் காவலர் தூண்டுதலின் பேரிலேயே பாக்கியராஜ் கழுத்தை அறுத்து கொண்டதாக கூறி உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய இறந்த பாக்கியராஜின் மனைவி அபிராமி, தனது கணவர் பாக்கியராஜ் இயற்கை உபாதை போக இன்று காலை அயப்பாக்கம் பகுதிக்கு நண்பருடன் ஆட்டோவில் சென்றார்.

அப்போது அங்கு வந்த ரோந்து காவலரான சந்தோஷ் குடிப்பதற்காக இங்கு வந்தீர்களா எனக்கூறியதால் பாக்கியராஜ் காவலருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.இதனால் தனது கணவர் புதிதாக ஆசைப்பட்டு வாங்கிய ஐபோனை காவலர் சந்தோஷ் பிடுங்கிய போது செல்போன் கொடுக்குமாறு வாக்குவாதம் செய்தார்.செல்போனை தர மறுத்ததால் தனது கணவர் கீழே இருந்த பீர் பாட்டிலை எடுத்து செல்போன் தராவிட்டால் அறுத்து கொள்வேன் என மிரட்டினார்.அதற்கு ஆம்பளையா இருந்தால் அறுத்துகொள் என காவலர் கூறியதால் கழுத்தை அறுத்து கொண்டதாக குற்றம்சாட்டினர்.மேலும் தனது கணவர் அறுத்துகொண்டதையும் பொருட்படுத்தாமல் காவலர் சென்றுவிட்டதாக உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.இதனால் பாக்கியராஜின் சாவிற்கு காரணமான காவலர் சந்தோஷ் நேரில் வரும்வரையில் உடலை பெற மாட்டோம் என உறவினர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் இந்த தற்கொலை தொடர்பாக திருமுல்லைவாயில் போலீசார் வழக்குபதிவு செய்து பாக்கியராஜின் நண்பர் பிரதீப்படம் அம்பத்தூர் துணை ஆணையர் மற்றும் உதவி ஆணையர் விசாரணை நடத்தி வருகின்றனர்... மேலும் இச்சம்பவம் குறித்து காவலர் சந்தோஷிடம் துறைரீதியான விசாரணை நடத்தவும் திட்டமிட்டுள்ளனர்.
 

click me!