மதுரையில் பயங்கரம்.. இன்று திருமணம் நடக்க இருந்த நிலையில் மகனை கோடாரியால் வெட்டி கொன்ற தந்தை..!

Published : Jul 11, 2021, 04:48 PM IST
மதுரையில் பயங்கரம்..  இன்று திருமணம் நடக்க இருந்த நிலையில் மகனை கோடாரியால் வெட்டி கொன்ற தந்தை..!

சுருக்கம்

இன்று திருமணம் நடக்க இருந்த நிலையில் நண்பர்களுக்கு மதுவிருந்து வைக்க தந்தையிடம் பணம் கேட்டு மகன் தகராறில் ஈடுபட்டதால் மகனை கோடாரியால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   

இன்று திருமணம் நடக்க இருந்த நிலையில் நண்பர்களுக்கு மதுவிருந்து வைக்க தந்தையிடம் பணம் கேட்டு மகன் தகராறில் ஈடுபட்டதால் மகனை கோடாரியால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மதுரை மாவட்டம் அய்யனகவுண்டன் பட்டியை சேர்ந்தவர் இளங்கோவன் (49). சுமை தூக்கும் தொழிலாளி. இவருடைய மனைவி ராணி(45). இவர்களுக்கு சுபாஷ்(22), பிரதீப்(20) என்ற 2 மகன்கள், ஒரு மகளும் உள்ளார். இதில், பிரதீப் ஆடு வளர்த்துக் கொண்டு லோடுமேன் வேலையும் செய்து வந்தார். இந்நிலையில், அவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது. அவருக்கும், அவரது உறவினர் பெண்ணிற்கும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) திருமணம் நடத்த முடிவு செய்து அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வந்தது. 

இந்நிலையில், பிரதீப் நேற்று மாலை 5 மணி அளவில் மது குடித்து விட்டு வீட்டுக்கு வந்துள்ளார். பின்னர் தனது திருமணத்தையொட்டி நண்பர்களுக்கு மதுவிருந்துக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். அதற்கு பணம் தர வேண்டும் என கேட்டுள்ளார். ஆனால், தந்தை இளங்கோவன் பணம் தர மறுத்துள்ளார். மேலும், திருமணத்தை வைத்துக்கொண்டு இப்படி நடந்து கொள்கிறாயே என திட்டியுள்ளார். அதற்கு, பணம் தரவில்லை என்றால் நான் திருமணம் செய்யமாட்டேன் என்று பிரதீப் கூறி வீட்டில் உள்ளவர்களுடன் தகராறு செய்துள்ளார்.

இதுதொடர்பாக தந்தைக்கும், மகனுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால், ஆத்திரமடைந்த இளங்கோவன் அங்கிருந்த கோடாரியால் மகன் பிரதீப்பை சரமாரியாக வெட்டியுள்ளார். இதில், ரத்த வெள்ளத்தில் சாய்ந்த பீரதிப் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். இதனையடுத்து, மகனை கொலை செய்த தந்தையை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

PREV
click me!

Recommended Stories

போதையில் இளைஞர்கள் அட்டூழியம்.. பள்ளி மாணவிகள் பின்னே சென்று அட்ராசிட்டி.. இறுதியில் நடந்த ட்விஸ்ட்
ரூ.2000 கொடுத்தா இளம்பெண்களுடன் ஜாலியாக இருக்கலாம்.. போலீஸ் என்று தெரியாமல் வசமாக சிக்கிய கும்பல்