ப்ளீஸ்.. என்னோட பொண்டாட்டிய விட்டுடுங்க.. சாமி கும்பிட சென்ற பெண்ணை லாட்ஜில் வைத்து கதற கதற பலாத்காரம்..!

Published : Jul 10, 2021, 07:43 PM ISTUpdated : Jul 10, 2021, 07:48 PM IST
ப்ளீஸ்.. என்னோட பொண்டாட்டிய விட்டுடுங்க.. சாமி கும்பிட சென்ற பெண்ணை லாட்ஜில் வைத்து கதற கதற பலாத்காரம்..!

சுருக்கம்

இதனைப்பார்த்த அந்த பெண்ணின் கணவர் அவர்களை தடுக்க முயன்றார். அப்போது அந்த கும்பல், பெண்ணின் கணவரை தாக்கிவிட்டு பெண்ணை அருகில் உள்ள ஒரு லாட்ஜூக்குள் தூக்கிச்சென்று பலாத்காரம் செய்தார். இதனையடுத்து, மறுநாள் காலையில் லாட்ஜில் இருந்து அந்த பெண் தப்பிவந்தார்.

பழனி கோவிலுக்கு சென்றுவிட்டு கணவருடன் சென்ற பெண்ணை கடத்தி 3 பேர் லாட்ஜில் வைத்து பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கேரள மாநிலம் கண்ணூர் பகுதியை சேர்ந்த சுமார் 40 வயது மதிக்கத்தக்க பெண், தனது கணவருடன் கடந்த மாதம் 19-ம் தேதி பழனிக்கு சென்றார். அங்கு கணவன்-மனைவி இருவரும் கோவிலில் சாமி கும்பிட்டு விட்டு ஊருக்கு புறப்பட்டனர். பழனி பேருந்து நிலையம் நோக்கி அவர்கள் நடந்து சென்றனர். வழியில் பெண்ணின் கணவர் அருகில் உள்ள கடைக்கு சென்றார். அப்போது அங்கு வந்த 3 பேர் கொண்ட கும்பல், அந்த பெண்ணை கடத்தி செல்ல முயன்றனர். 

இதனைப்பார்த்த அந்த பெண்ணின் கணவர் அவர்களை தடுக்க முயன்றார். அப்போது அந்த கும்பல், பெண்ணின் கணவரை தாக்கிவிட்டு பெண்ணை அருகில் உள்ள ஒரு லாட்ஜூக்குள் தூக்கிச்சென்று பலாத்காரம் செய்தார். இதனையடுத்து, மறுநாள் காலையில் லாட்ஜில் இருந்து அந்த பெண் தப்பிவந்தார்.  வெளியில் நின்ற  கணவரிடம், தன்னை தூக்கிச்சென்ற 3 நபர்கள் லாட்ஜ் அறையில் அடைத்துவைத்து பலாத்காரம் செய்ததாக கூறி கதறினார். 

இதனையடுத்து, இருவரும் பழனி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். ஆனால் போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதையடுத்து அந்த பெண் தனது கணவருடன் கண்ணூருக்கு திரும்பி விட்டார். இந்நிலையில், அந்த பெண்ணுக்கு நேற்று திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதையடுத்து அவர் கண்ணூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அப்போது தனக்கு சிகிச்சையளித்த மருத்துவர்களிடம் தன்னை 3 பேர் பலாத்காரம் செய்து விட்டதாக கூறியிருக்கிறார். 

இதுபற்றி மருத்துவர்கள் கண்ணூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் மருத்துவமனைக்கு சென்று அந்த பெண்ணிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர்  நடந்த சம்பவங்கள் குறித்து போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் அந்த பெண் கூறுவது உண்மையா? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

PREV
click me!

Recommended Stories

ஆண்ட்டியின் அழகில் மயங்கிய கொரியர் ஊழியர்.. ரவுடியின் மனைவிக்கு விடாமல் காதல் மெசேஜ்.. இறுதியில் நடந்த அதிர்ச்சி
கதறிய மருமகள் நிகிலா.. விடாத 52 வயது மாமனார்.. ரசித்த மகன் பிரதீப்.. அமமுக பிரமுகர்கள் வெறியாட்டம்