கட்டிலில் கட்டிபுரண்டு கள்ளக்காதலனுடன் மனைவி உல்லாசம்.. நேரில் பார்த்த கணவர்.. இறுதியில் நேர்ந்த பயங்கரம்.!

Published : Jul 09, 2021, 06:29 PM IST
கட்டிலில் கட்டிபுரண்டு கள்ளக்காதலனுடன் மனைவி உல்லாசம்.. நேரில் பார்த்த கணவர்.. இறுதியில் நேர்ந்த பயங்கரம்.!

சுருக்கம்

நேரமாக மனைவியை பார்க்க வீட்டுக்கு சென்ற போது வீடு உள்பக்கமாக பூட்டியிருந்தது. இதனையடுத்து, ஜன்னல் வழியாக எட்டி பார்த்த போது மனைவி சுப்புலட்சுமி செல்வக்குமாருடன் உல்லாசமாக இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.  இதையடுத்து சிவசக்தி 2 பேரையும் கையும் களவுமாக பிடிக்க திட்டமிட்டார். 

மதுரையில் கள்ளக்காதலி வீட்டில் கள்ளக்காதலன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரை கரும்பாலை பி.டி காலனியைச் சேர்ந்தவர் சிவசக்தி (43). இவர் அங்குள்ள ஓட்டலில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி சுப்புலட்சுமி (32), இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். கணவன்-மனைவி இடையே அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டதையடுத்து  தாய் வீட்டில் வசித்து வந்தார். குடும்பம் வறுமையின் சூழலை அறிந்து சுப்புலட்சுமி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருப்பூருக்கு வேலைக்கு சென்றுவிட்டார். அங்குள்ள ஒரு பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்த போது மதுரையை சேர்ந்த  செல்வகுமார் (27) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே கள்ளக்காதலாக மாறியுள்ளது. இருவரும் தனிமையில் அடிக்கடி உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். 

இந்நிலையில், கொரோனா காலம் என்பதால் திருப்பூரில் கம்பெனி மூடப்பட்டது. இதனால் சுப்புலட்சுமி கடந்த சில மாதங்களுக்கு முன்பு மதுரை பி.டி. காலனியில் உள்ள தாய் வீட்டுக்கு திரும்பினார். அதேபோல் செல்வகுமாரும் சொந்த ஊர் திரும்பினார். இவர்களின் கள்ளக்காதல் இங்கும் தொடர்ந்தது. மனைவி சுப்புலட்சுமி மீண்டும் மதுரை திரும்பிய செய்தியை அறிந்த கணவர் சிவசக்தி மாமியார் வீட்டுக்கு சென்று நாம் மீண்டும் சேர்ந்து வாழலாம் என மனைவியை அழைத்துள்ளார். ஆனால், மனைவி கணவருடன் சேர்ந்து வாழ மறுத்துவிட்டார். இதனால் விரக்தி அடைந்த கணவர் விஷம் குடித்து தற்கொலை முயன்றார். பின்னர், அக்கம் பக்கத்தினர் மீட்டு  மதுரை அரசு மருத்துவமைனயில் அனுமதித்தனர். 

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தைதயடுத்து நேற்று வீடு திரும்பினார். நேரமாக மனைவியை பார்க்க வீட்டுக்கு சென்ற போது வீடு உள்பக்கமாக பூட்டியிருந்தது. இதனையடுத்து, ஜன்னல் வழியாக எட்டி பார்த்த போது மனைவி சுப்புலட்சுமி செல்வக்குமாருடன் உல்லாசமாக இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து சிவசக்தி 2 பேரையும் கையும் களவுமாக பிடிக்க திட்டமிட்டார்.

எனவே அவர் வீட்டு கதவை தட்டினார். சுமார் 10 நிமிடங்களுக்கு பிறகு கதவைத் திறந்த சுப்புலட்சுமி, நான் உன்னுடன் சேர்ந்து வாழ விரும்பவில்லை, எனவே நீ வீட்டுக்குள் வரக்கூடாது என்று தடுத்தார். இருந்தபோதிலும் சிவசக்தி நான் குளித்து விட்டு சென்று விடுகிறேன் என்று கூறிவிட்டு வீட்டுக்குள் சென்று பார்த்தார். அப்போது பாத்ரூமில் செல்வகுமார் ஒளிந்து இருந்தார். ஆத்திரமடைந்த சிவசக்தி வீட்டுக்கு வெளியே சென்று கதவை பூட்டினார். அதன்பிறகு அக்கம்பக்கத்தினரை அழைத்தார். இதனால், அசிங்கம் தாங்க முடியாமல் கள்ளக்காதலி வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

PREV
click me!

Recommended Stories

ஆண்ட்டியின் அழகில் மயங்கிய கொரியர் ஊழியர்.. ரவுடியின் மனைவிக்கு விடாமல் காதல் மெசேஜ்.. இறுதியில் நடந்த அதிர்ச்சி
கதறிய மருமகள் நிகிலா.. விடாத 52 வயது மாமனார்.. ரசித்த மகன் பிரதீப்.. அமமுக பிரமுகர்கள் வெறியாட்டம்