மது கலந்த குளிர்பானம் கொடுத்து 20 வயது இளம்பெண் பலாத்காரம்.. திருமணமாகியும் விடாத 55 வயது முதியவர்.!

Published : Jul 09, 2021, 05:03 PM IST
மது கலந்த குளிர்பானம் கொடுத்து 20 வயது இளம்பெண் பலாத்காரம்.. திருமணமாகியும் விடாத 55 வயது முதியவர்.!

சுருக்கம்

வீட்டில் தனியாக இருந்த இளம் பெண்ணை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த 55 வயது முதியவரை போலீசார் போக்சோவில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

வீட்டில் தனியாக இருந்த இளம் பெண்ணை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த 55 வயது முதியவரை போலீசார் போக்சோவில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம் தேவனந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் சேட்டு (55).  இவருக்கு 2 மகள்கள் உள்ளனர். இவர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வீட்டில் தனியாக இருந்த போது அறிமுகமான 20 வயது இளம்பெண் வீட்டுக்கு அடிக்கடி சென்று வந்துள்ளார். அப்போது, வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில்  மது கலந்த குளிர்பானத்தை குடித்த பெண் மதுபோதையில் மயங்கியுள்ளார். அப்போது, இளம்பெண்ணை சேட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். 

பின்னர், இந்த சம்பவத்தை வெளியில் சொன்னால் உன்னை கொலை செய்துவிடுவேன். மேலும், உனக்கு திருமண ஏற்பாடு நடந்து வருகிறது. அதையும் தடுத்து நிறுத்திவிடுவேன் என்று சேட்டு மிரட்டியுள்ளார். அதன்பிறகு இதை சொல்லி அடிக்கடி மிரட்டி பலமுறை பலாத்காரம் செய்துள்ளார். 

இந்நிலையில், அந்த பெண்ணுக்கு வேறு மாவட்டத்தை சேர்ந்த ஒருவருடன் கடந்த பிப்ரவரி மாதம் திருமணமானது.  அந்த இளம்பெண் சில நாட்களுக்கு முன்பு தன் தாய் வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது, அவருக்கு மீண்டும் சேட்டு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால், அதிர்ச்சியடைந்த அந்த பெண் தனது கணவர் மற்றும் குடும்பத்தினரிடம் கதறிய படி நடந்தவற்றை கூறியுள்ளார். 

இதனையடுத்து, அந்த பெண்ணும், அவரது கணவரும் திருவண்ணாமலை மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த சேட்டுவை போக்சோவில் கைது செய்து சிறையில் அடைத்தனர். 

PREV
click me!

Recommended Stories

முதலிரவில் அதிர்ச்சி.. திருமணமான 3 நாளில் விவாகரத்து கேட்ட புதுப்பெண்! நடந்தது என்ன?
ஆண்ட்டியின் அழகில் மயங்கிய கொரியர் ஊழியர்.. ரவுடியின் மனைவிக்கு விடாமல் காதல் மெசேஜ்.. இறுதியில் நடந்த அதிர்ச்சி