இணையத்தில் தீயாய் பரவிய இளைஞர்களின் செயல்... வைரல் வீடியோ ஆசாமிகளை பிடிக்க 4 போலீஸ் தனிப்படைகள் அமைப்பு...!

Kanimozhi Pannerselvam   | Asianet News
Published : Jul 09, 2021, 10:45 AM IST
இணையத்தில் தீயாய் பரவிய இளைஞர்களின் செயல்... வைரல் வீடியோ ஆசாமிகளை பிடிக்க 4 போலீஸ் தனிப்படைகள் அமைப்பு...!

சுருக்கம்

கோவையில் இளைஞர்கள் சிலர் கூட்டாக அமர்ந்து போதை ஊசி போட்டுக்கொள்ளும் வீடியோ சோசியல் மீடியாவில் வைரலானது. 

சமீபகாலமாக இளைஞர்கள் போதைக்கு அடிமையாகி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மது, புகைப்பிடிக்கும் பழக்கத்தை எல்லாம் கடந்து தற்போது போதை மாத்திரைகள் மற்றும் போதை ஊசி பழக்கத்திற்கு இளைஞர்கள் அடிமையாகி வருகின்றனர். இந்நிலையில் கோவையில் இளைஞர்கள் சிலர் கூட்டாக அமர்ந்து போதை ஊசி போட்டுக்கொள்ளும் வீடியோ சோசியல் மீடியாவில் வைரலானது. 

கோவை உக்கடம் அருகேயுள்ள புல்லுக்காடு பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் போதை ஊசி போட்டுக்கொள்ளும் வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பைக் கிளப்பியது. இதில் இளைஞர்கள் இருட்டான பகுதியில் கூட்டமாக அமர்த்து போதை ஊசியை தயாரித்து போதை ஊசி போட்டுக்கொள்வது பதிவாகி இருந்தது. ஏராளமான இளைஞர்கள் ஒன்றாக அமர்ந்து போதை ஊசி போடும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

இளைஞர்கள் கும்பலாக போதைப் ஊசி போடும் வீடியோ காட்சிகள் கோவை மாநகர காவல் துறையினரின் கவனத்திற்கு சென்றது. இதையடுத்து அக்காட்சிகளை வைத்து காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சமூக வலைதளங்களில் வெளியான  வீடியோ காட்சிகளில் இருக்கும் இளைஞர்கள் குறித்தும், அவர்களின் பின்னணி குறித்தும் போலீசார் விசாரணையைத் தொடங்கினர். மேலும் அந்த வீடியோவில் போதை ஊசி போட்டுக்கொள்ளும் இளைஞர்களை கண்டறிந்து பிடிப்பதற்காக  4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. மருத்துவர்களின் பரிந்துரையின்றி வலி நிவாரண மாத்திரைகளை விற்கும் மருந்தகங்களின் உரிமம் ரத்தாகும் என்றும் கோவை மாநகர காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. 
 

PREV
click me!

Recommended Stories

முதலிரவில் அதிர்ச்சி.. திருமணமான 3 நாளில் விவாகரத்து கேட்ட புதுப்பெண்! நடந்தது என்ன?
ஆண்ட்டியின் அழகில் மயங்கிய கொரியர் ஊழியர்.. ரவுடியின் மனைவிக்கு விடாமல் காதல் மெசேஜ்.. இறுதியில் நடந்த அதிர்ச்சி