உல்லாசத்துக்கு இடையூறு.. விடுதலை சிறுத்தைகள் பிரமுகருடன் சேர்ந்து கணவனை போட்டு தள்ளிய மனைவி.!

Published : Jul 10, 2021, 06:21 PM ISTUpdated : Jul 10, 2021, 06:23 PM IST
உல்லாசத்துக்கு இடையூறு.. விடுதலை சிறுத்தைகள் பிரமுகருடன் சேர்ந்து கணவனை போட்டு தள்ளிய மனைவி.!

சுருக்கம்

எனது திருமணத்துக்கு முன்னரே சுந்தரை காதலித்து வந்தேன். பின்னர் பெற்றோரின் வற்புறுத்தலினால், உறவினரான முத்துகுமாரை திருமணம் செய்தேன். சுந்தருக்கும் திருமணமாகி மனைவி, குழந்தைகள் உள்ளனர். 

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த டாஸ்டாக் பார் ஊழியர் கழுத்து நெரித்து கொலை செய்த சம்பவம் தொடர்பாக அவரது மனைவி மற்றும் கள்ளக்காதலனை போலீசார் கைது செய்யப்பட்டுள்ளனர். 

நெல்லை மாவட்டம் நாங்குநேரி பெருந்தெருவைச் சேர்ந்தவர் முத்துகுமார் (38). இவர் அப்பகுதியில் உள்ள டாஸ்மாக் பாரில் ஊழியராக வேலை செய்து வந்தார். இவருடைய மனைவி சுமித்ரா (31). இவர்களுக்கு தனுஸ்ரீ (5), இசைவி (3) ஆகிய 2 மகள்கள் உள்ளனர். கடந்த 7-ம் தேதி காலையில் வழக்கம்போல் முத்துகுமார் வேலைக்கு சென்று விட்டு இரவில் வீட்டுக்கு திரும்பினார். பின்னர் மறுநாள் அதிகாலையில் முத்துகுமார் தனது வீட்டின் வாசலில் மயங்கிய நிலையில் கிடந்தார். உடனே அவரை குடும்பத்தினர் மீட்டு சிகிச்சைக்காக நாங்குநேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் முத்துகுமார் ஏற்கனவே இறந்ததாக தெரிவித்தனர்.

இதுதொடர்பாக  நாங்குநேரி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.  சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் முத்துகுமாரின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனைக்கு பின்னர் முத்துகுமாரின் உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்நிலையில், பிரேத பரிசோதனை அறிக்கையில், முத்துகுமாரின் கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதனையடுத்து, அவரது மனைவியிடம் போலீசார் விசாரணை நடத்திய போது முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார். 

அதனால், சந்தேகம் அடைந்த போலீசார் அவரிடம் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தினர். அப்போது, கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை கொலை செய்ததாக மனைவி ஒப்புக்கொண்டார். அவர் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில்;- எனது திருமணத்துக்கு முன்னரே சுந்தரை காதலித்து வந்தேன். பின்னர் பெற்றோரின் வற்புறுத்தலினால், உறவினரான முத்துகுமாரை திருமணம் செய்தேன். சுந்தருக்கும் திருமணமாகி மனைவி, குழந்தைகள் உள்ளனர். எனினும் சுந்தருடனான கள்ளக்காதலை தொடர்ந்து வந்தேன். இதனை அறிந்த முத்துகுமார் எங்களைக் கண்டித்தார். 

இந்நிலையில், கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் முத்துகுமார் மதுபோதையில் தூங்கி கொண்டிருந்தார். அப்போது சுந்தரை வீட்டுக்கு வரவழைத்தேன். பின்னர் நானும், சுந்தரும் சேர்ந்து முத்துகுமாரின் முகத்தில் தலையணையால் அமுக்கியும், கழுத்தில் போர்வையால் நெரித்தும் கொலை செய்தோம். பின்னர் முத்துகுமாரின் உடலை வீட்டின் வாசலில் தூக்கிப்போட்டு விட்டு, அவர் தடுமாறி விழுந்து இறந்ததாக நாடகமாடினோம் என்றார். இதனையடுத்து, இருவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். கைதான சுந்தர், விடுதலை சிறுத்தைகள் கட்சி நகர செயலாளராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

PREV
click me!

Recommended Stories

முதலிரவில் அதிர்ச்சி.. திருமணமான 3 நாளில் விவாகரத்து கேட்ட புதுப்பெண்! நடந்தது என்ன?
ஆண்ட்டியின் அழகில் மயங்கிய கொரியர் ஊழியர்.. ரவுடியின் மனைவிக்கு விடாமல் காதல் மெசேஜ்.. இறுதியில் நடந்த அதிர்ச்சி