உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவின் கவுதம் புத்த நகர் பகுதியில் உள்ள சாக்கடை கழிவுநீர் தொட்டியில் 42 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து, அவரின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
உல்லாசத்துக்கு தடையாக இருந்த கணவனை கொன்று செப்டிங் டேங்கில் மறைத்து வைத்த மனைவி மற்றும் அவரது கள்ளக்காதலனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவின் கவுதம் புத்த நகர் பகுதியில் உள்ள சாக்கடை கழிவுநீர் தொட்டியில் 42 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து, அவரின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் உயிரிழந்தது சதீஷ் பால் (42) என்பது உறுதியானது.
இதையும் படிங்க;- ஆசைவார்த்தை கூறி உல்லாசம்.. வீடியோ எடுத்து மிரட்டி இளம்பெண்ணை சீரழித்த சிறை வார்டன்கள்.!
இந்த கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் சந்தேகத்தின் பேரில் அவரது மனைவியிடம் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தப்பட்டது. அப்போது, சதீஷ் பால் மனைவி நீதுவுக்கும், ஹர்பால் என்பவருக்கும் கள்ளத் தொடர்பு இருந்து வந்துள்ளது. இதனை அறிந்த சதீஷ் பால் மனைவியை கண்டித்துள்ளார். இதனால், உல்லாசத்துக்கு தடையாக இருந்த சதீஷ் பாலை கொலை செய்ய இருவரும் திட்டமிட்டனர்.
குடிபழக்கம் கொண்ட சதீஷ் பாலுக்கு, கடந்த 1ம் தேதி மதுவில் போதை மாத்திரையை கலந்து கொடுத்தனர். பின்னர் சதீஷ் பாலின் கழுத்தை நெரித்து கொன்று சாக்கடை கால்வாய் தொட்டியில் சடலத்தை மறைத்து வைத்திருந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக மனைவி நீதுவும், ஹர்பாலும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதையும் படிங்க;- முனகல் சத்தம்.. அரை நிர்வாணத்தில் அண்ணியுடன் உல்லாசம்.. நேரில் பார்த்த கொழுந்தன் என்ன செய்தார் தெரியுமா?