அமமுக பிரமுகர் கடத்தி கொலை.. கூலிப்படையினரால் ஸ்கெட்ச் போட்டு தூக்கியது அம்பலம்.. விசாரணையில் பகீர் தகவல்.!

By vinoth kumarFirst Published Jan 17, 2023, 9:39 AM IST
Highlights

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி கொசப்பாளையம் பழனி ஆண்டவர் கோவில் தெருவை சேர்ந்தவர் கோதண்டம் (68). இவர் திருவண்ணாமலை வடக்கு மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழக மாவட்ட அவை தலைவராக இருந்து வந்தார். பட்டு சேலை வியாபாரம் மற்றும் வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்து வந்தார். 

கூலிப்படை வைத்து அமமுக பிரமுகர் கொலை செய்த வழக்கில் முக்கிய குற்றவாளிகள் 4 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 2 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன. 

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி கொசப்பாளையம் பழனி ஆண்டவர் கோவில் தெருவை சேர்ந்தவர் கோதண்டம் (68). இவர் திருவண்ணாமலை வடக்கு மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழக மாவட்ட அவை தலைவராக இருந்து வந்தார். பட்டு சேலை வியாபாரம் மற்றும் வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்து வந்தார். இவர் கடந்த 5-ம் தேதி செய்யாறுக்கு சென்ற கோதண்டம் மீண்டும் வீடு திரும்பவில்லை. அவரது செல்போனை தொடர்பு கொண்ட போது  சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இதனால், பதறிப்போன குடும்பத்தினர் ஆரணி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனையடுத்து, தனிப்படை அமைக்கப்பட்டு அவரை தீவிரமாக தேடி வந்தனர். 

இதையும் படிங்க;- உல்லாசமாக இருந்த போது இடையூறு.. ஆத்திரத்தில் குழந்தை பீர் பாட்டிலால் அடித்து கொன்ற தாயின் கள்ளக்காதலன்

கோதண்டத்தின் செல்போன் எண்ணை ஆய்வு செய்ததில் ஆரணி அடுத்த ஆகாரம் கிராமத்தை சேர்ந்த சரவணன் பல முறை பேசியது தெரியவந்தது. இதனையடுத்துது, அவரிடம் நடத்திய விசாரணையில் அதிர்ச்சி தகவல் வெளியானது. பணம், கொடுக்கல் வாங்கல் தகராறில் நண்பரான ஆரணி அருணகிரிசத்திரம் பூந்தோட்டம் பகுதியைச் சேர்ந்த குமரன் மற்றும் ஆந்திர மாநில கூலிப்படையினரை கொண்டு கடத்தி கழுத்தை நெரித்து கொலை செய்து உடலை ஆந்திர மாநிலம் சத்தியவேடு பகுதியில் உள்ள கால்வாயில் வீசியது தெரியவந்தது. 

இதையும் படிங்க;- மச்ச எங்க இருங்க!பொண்ணு ஒண்ணு மாட்டி இருக்கு சீக்கிரம் வாடா!காலில் விழுந்து கதறியும் விடாமல் கூட்டு பலாத்காரம்

இது சம்பந்தமாக தனிப்படை போலீசார் முக்கிய குற்றவாளிகளான சரவணன்(36), குமரன்(35), சென்னையை சேர்ந்த நேருஜி(42), குட்டி என்ற தணிகாசலம்(45) ஆகிய 4 பேரை கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 2 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதனையடுத்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட 4 பேரும் வேலூர்  மத்திய சிறையில் அடைத்தனர்.

click me!