‘நானும் ரௌடிதான், நானும் ரௌடிதான்!’ போலீசுக்கு தண்ணி காட்டிய டுபாக்கூர் ரௌடி

Published : Jan 16, 2023, 08:56 PM ISTUpdated : Jan 16, 2023, 08:57 PM IST
‘நானும் ரௌடிதான்,  நானும் ரௌடிதான்!’ போலீசுக்கு தண்ணி காட்டிய டுபாக்கூர் ரௌடி

சுருக்கம்

திரைப்படத்தில் வரும் வடிவேலு காமெடி போல தற்போது ஒரு சம்பவம் ஒன்று நடந்துள்ளது.

தலைநகரம் படத்தில் நாய் சேகர் என்ற கெட்டப்பில் வைகைப்புயல் வடிவேலு கலக்கியிருப்பார். அதில் வரும் ஒரு காமெடியில் நானும் ரௌடிதான்,   நானும் ரௌடிதான் என்று சொல்லி போலீஸ் ஜீப்பில் ஏறுவார். அதுபோல தான் தற்போது ஒரு சம்பவம் நடந்துள்ளது.

ஈரோடு மாவட்டம், அம்மாபேட்டை அருகே உள்ள நெருஞ்சிப்பேட்டை அம்மாவாசை மணியகாரன் வீதியைச் சேர்ந்த தேவராஜ் மகன் தன்னாசிவரதன். இவருக்கு வயது 44 ஆகிறது. இவர் சிங்கம்பேட்டை கேட் பஸ் ஸ்டாப் அருகே குடிபோதையில் நின்று கொண்டு தகாத வார்த்தைகளை பேசியுள்ளார்.
இதையும் படிங்க..நான் பைத்தியமா? Y பிரிவு பாதுகாப்பு போதாதா.? அண்ணாமலைக்கு சவால்விட்ட காயத்ரி ரகுராம்!

அதை பார்த்த பகுதி மக்கள் அவரை போகச் சொல்லி இருக்கிறார்கள். அவர்களை பார்த்து நானும் ரவுடிதான் தெரியுமா ? என்று கூறியுள்ளார். பொங்கல் வந்துவிட்டதால் பஸ்ஸில் நிறைய பேர் வருவார்கள். பஸ் கண்ணாடியை உடைத்தால் நான் பெரிய ரவுடி என ஊருக்கே தெரியும் என்று கூறி அந்த வழியாக வந்த பஸ்ஸின் கண்ணாடி கல்லையும் எடுத்து வீசி உள்ளார்.

அப்போது வந்த பஸ் ஒன்று வேகமாக சென்று விட்டதால் எந்தவித சேதாரம் ஏற்படவில்லை. இது குறித்து அப்பகுதியினர் அம்மாபேட்டை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். உடனே விரைந்து வந்த அவர்கள் நானும் ரவுடிதான் எனக்கூறி அட்டகாசம் செய்த நபரை கைது செய்து வழக்கு பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை மட்டுமல்ல, கலகலப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க..குடும்ப தலைவிக்கு மாதம் 2 ஆயிரம் ரூபாய்.. ஸ்டாலின் ஸ்டைலில் பிரியங்கா காந்தி அறிவிப்பு! பெண்கள் குஷி!

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

அடச்சீ.. இப்படி ஒரு தாயா? 31 வயது கள்ளக்காதலனுக்கு 18 வயது மகளை திருமணம் செய்து வைத்த கொடூரம்
பட்டப்பகலில் நடந்த அதிர்ச்சி.. காப்பாத்துங்க.. காப்பாத்துங்க.. கணவன் கண்முன்னே அலறிய மனைவி..