காஞ்சிபுரத்தில் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
காஞ்சிபுரத்தில் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் 5 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டம், விப்பேடு பகுதியில் உள்ள வீட்டுமனை பகுதியில், காஞ்சிபுரத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் அவரது ஆண் நண்பருடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அடையாளம் தெரியாத சில இளைஞர்கள் கத்தியைக் காட்டி மிரட்டி அந்த மாணவியை பலவந்தமாக அழைத்து சென்று கூட்டுப் பாலியல் செய்து பலாத்காரம் செய்து தப்பியோடினர்.
இதுகுறித்து கல்லூரி மாணவர் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது, பாதிக்கப்பட்ட பெண், 5 பேரும் யார் என்று தனக்கு தெரியாது எனவும் ஆனால் அவர்களுள் ஒருவர் பெயர் விமல் என்று சக நண்பர்கள் கூறிக் கொண்டிருந்தனர் என்றும் தெரிவித்துள்ளார். பிறகு தனிப்படைகள் அமைக்கப்பட்டு அந்தப் பகுதியில் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
இதையும் படிங்க..ஆசையாக பெரியப்பா மு.க அழகிரி வீட்டுக்கு போன உதயநிதி! மதுரையில் திடீர் சந்திப்பு.. குஷியில் உடன்பிறப்புகள் !!
விசாரணையில், அதே பகுதியை சேர்ந்த விமல் என்ற நபரை கைது செய்ய முயற்சித்த போது தப்பிய நிலையில் தனிப்படையினர் துரத்திச் சென்று பிடித்து காவல் நிலையத்தில் வைத்து விசாரித்தனர். விசாரணையில், அவரது தனது நண்பர்கள் 4 பேருடன் கூட்டு சேர்ந்து மாணவியை பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது.
இதனை அடுத்து விப்பேடு பகுதியை சேர்ந்த தென்னரசு, விக்னேஷ், சிவக்குமார் மற்றும் செவிலிமேடு பகுதியை சேர்ந்த மணிகண்டன் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர். கைதான 5 பேர் மீதும் கூட்டு பாலியல் பலாத்கார வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
கைது செய்யப்பட்டவர்கள் காதலர்களை நோட்டமிட்டு, இரவு நேரம் நெருங்கிய நிலையில் இவர்கள் தனிமையில் இருந்ததை கண்டு அவர்களை மிரட்டி , கூட்டுப் பாலியல் செய்து அதை வீடியோ எடுத்து வைத்துள்ளளனர். போலீஸாரிடம் சென்றால் அந்த வீடியோவை சமூக வலைத்தளத்தில் வெளியிடுவோம் என மிரட்டி உள்ளனர் என்று போலீஸ் தரப்பும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க..குடும்ப தலைவிக்கு மாதம் 2 ஆயிரம் ரூபாய்.. ஸ்டாலின் ஸ்டைலில் பிரியங்கா காந்தி அறிவிப்பு! பெண்கள் குஷி!
இதையும் படிங்க..ஆரம்பமே இப்படியா? பிரதமர் மோடி தொடங்கி வைத்த கங்கா விலாஸ் சொகுசு கப்பலுக்கு என்னாச்சு? உண்மை நிலவரம் என்ன?