கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. தாலி கட்டிய புருஷனை போட்டு தள்ளிவிட்டு நாடகமாடிய 27 வயது இளம்பெண்..!

Published : Sep 05, 2022, 11:04 AM ISTUpdated : Sep 05, 2022, 11:08 AM IST
 கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. தாலி கட்டிய புருஷனை போட்டு தள்ளிவிட்டு நாடகமாடிய 27 வயது இளம்பெண்..!

சுருக்கம்

கர்நாடக மாநிலம் பெங்களூரு கோனனகுன்டேவைச் சேர்ந்தவர் மகேஷ் (30). இவரது மனைவி ஷில்பா (27). திருமணத்துக்கு முன்பே ஷில்பாவுக்கும் சந்தோஷ் என்பவருக்கும் இடையே காதல் இருந்து வந்துள்ளது. ஆனால், இவரது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் வேறு வழியில்லாமல் மகேஷை திருமணம் செய்து கொண்டார். 

கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை கொலை செய்துவிட்டு வலிப்பு நோயால் இறந்ததாக நாடகமாடிய மனைவியை போலீசார் கைது செய்துள்ளனர். 

கர்நாடக மாநிலம் பெங்களூரு கோனனகுன்டேவைச் சேர்ந்தவர் மகேஷ் (30). இவரது மனைவி ஷில்பா (27). திருமணத்துக்கு முன்பே ஷில்பாவுக்கும் சந்தோஷ் என்பவருக்கும் இடையே காதல் இருந்து வந்துள்ளது. ஆனால், இவரது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் வேறு வழியில்லாமல் மகேஷை திருமணம் செய்து கொண்டார். ஆனால், திருமணம் செய்து கொண்ட பின்னரும் காதலனுடன் தொடர்பில் இருந்துள்ளார். அடிக்கடி வெளியில் செல்வதாக கூறி கள்ளக்காதலுடன் உல்லாசமாக இருந்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த 2ம் தேதி கள்ளக்காதலன் உதவியுடன் கணவரை கழுத்தை நெரித்து கொன்ற மனைவி அவர் உடலை மாண்டியாவுக்கு காரில் கொண்டு சென்றார்.

இதையும் படிங்க;- பொதுவெளியில் 60 வயது கிழவன் சுய இன்பம்.. நேரில் பார்த்த சிறுவன்.. இறுதியில் என்ன நடந்தது என்ன தெரியுமா?

அங்கு வலிப்பு நோயால் உயிரிழந்து விட்டதாக கணவர் குடும்பத்துக்கு தகவல் தெரிவித்தார். மகனின் உடலை பார்த்து பெற்றோர் கதறினர். இதனையடுத்துது, மகன் கழுத்தில் காயங்கள் இருந்ததை அடுத்து பெற்றோர் மகன் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார்  மகேஷ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதில், மகேஷ் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டிருப்பதாக ஆய்வு அறிக்கையில் கூறப்பட்டது. 

இதனையடுத்து, மனைவியிடம் போலீசார் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தினர். அப்போது, கணவரை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இதுதொடர்பாக அவர் கூறுகையில்;- எனக்கு கணவனுடன் வாழ விருப்பமில்லை. அதனால் கள்ளக்காதலனுடன் சேர்ந்து கொலை செய்தேன். வலிப்பு நோயால் இறந்ததாக நாடகமாடினேன் என்று தெரிவித்தார். இதனையடுத்து, மனைவி, காதலனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். 

இதையும் படிங்க;- இரண்டு முறை கள்ளக்காதலனுடன் எஸ்கேப்பான மனைவி.. 3வது முறையாக என்ன நடந்தது தெரியுமா?

PREV
click me!

Recommended Stories

அரசு வழக்கறிஞர் முத்துக்குமாரசாமி கொலைக்கான பின்னணி.. எதிர்பாராத ட்விஸ்ட்.. போலீஸ் அதிர்ச்சி.!
முதலிரவில் அதிர்ச்சி.. திருமணமான 3 நாளில் விவாகரத்து கேட்ட புதுப்பெண்! நடந்தது என்ன?