உல்லாசத்துக்கு தடையாக இருந்த கணவர்! கல்லூரி கால காதலனுடன் சேர்ந்து கணவனை போட்டு தள்ளிய காமவெறி பிடித்த மனைவி.!

Published : Sep 15, 2022, 09:49 AM ISTUpdated : Sep 15, 2022, 09:51 AM IST
உல்லாசத்துக்கு தடையாக இருந்த கணவர்! கல்லூரி கால காதலனுடன் சேர்ந்து கணவனை போட்டு தள்ளிய காமவெறி பிடித்த மனைவி.!

சுருக்கம்

அம்சவள்ளிக்கும், மாங்கரை பகுதியை சேர்ந்த சந்தோஷ் (27) என்பவருக்கும் கல்லூரியில் படிக்கும் போதே காதல் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் மணிக்கும், அம்சவள்ளிக்கும் திருமணம் நடைபெற்றது. திருமணம் செய்து கொண்டாலும் சந்தோஷ் என்பவருடன் தொடர்பில் இருந்து வந்துள்ளார். 

கள்ளத்தொடர்பை கண்டித்த கணவரை கொடூரமாக கொலை செய்து தீ வைத்து எரித்த மனைவி, கள்ளக்காதலன் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். 

தர்மபுரி மாவட்டம் பெரும்பாலை அருகே நரசிபுரம் சுடுகாட்டில் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் பாதி எரிந்த நிலையில் கடந்த 10-ம் தேதி சடலமாக கிடந்தார். இதுதொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் எரிந்த நிலையில் சடலமாக கிடந்தவர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலை செய்யப்பட்டவர் யார் என்பது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர். கொலையுண்டவர் தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகே இண்டூர் சோமம்பட்டியை சேர்ந்த மணி(27) என்பதும், அங்குள்ள பீரோ பட்டறையில் சரக்கு ஆட்டோ டிரைவராக பணியாற்றியதும் தெரியவந்தது. இவருக்கு திருமணமாகி அம்சவள்ளி(24) என்ற மனைவியும், 2 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளதும் தெரியவந்தது. 

இதையும் படிக்க;- காதல் மனைவி கள்ளக்காதலனுடன் உல்லாசம்.. தட்டிகேட்ட கணவரை கழற்றிவிட்டு எஸ்கேப்.. இறுதியில் நடந்த சோகம்..!

இந்த கொலை தொடர்பாக மனைவியிடம் விசாரணை நடத்தியது போது முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளார். இதனையடுத்து அவரிடம் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தியதில் கள்ளக்காதலனுடன் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இதுதொடர்பாக போலீசார் தரப்பில் கூறுகையில்;- அம்சவள்ளிக்கும், மாங்கரை பகுதியை சேர்ந்த சந்தோஷ் (27) என்பவருக்கும் கல்லூரியில் படிக்கும் போதே காதல் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் மணிக்கும், அம்சவள்ளிக்கும் திருமணம் நடைபெற்றது. திருமணம் செய்து கொண்டாலும் சந்தோஷ் என்பவருடன் தொடர்பில் இருந்து வந்துள்ளார். இந்த விவகாரம் நாளடைவில் கணவருக்கு தெரியவந்ததையடுத்து மனைவியை கண்டித்துள்ளார். இதனால், தம்பதிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. 

இதையும் படிக்க;-  கட்டிலில் கட்டி புரண்டு அண்ணியுடன் உல்லாசமாக இருந்த கொழுந்தன்! நேரில் பார்த்த அண்ணன்! இறுதியில் நடந்த பயங்கரம்

இதனால் ஆத்திரமடைந்த அம்சவள்ளி, கணவனை கொலை செய்ய முடிவு செய்து கள்ளக்காதலனிடம் தெரிவித்துள்ளார். சம்பவத்தன்று மணிக்கு பணம் கொடுத்து அம்சவள்ளி மது குடிக்க வைத்துள்ளார். போதை ஏறியதும் சந்தோஷ், லோகேசுடன் இருசக்கர வாகனத்தில் மணியை பெரும்பாலைக்கு அழைத்து சென்றுள்ளார். அங்குள்ள நரசிபுரம் சுடுகாடு பகுதியில் வைத்து, கை கால்களை கட்டி போட்டு 2 பேரும் மணியை பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்துள்ளனர். இதையடுத்து போலீசார் அம்சவள்ளி, இவரது கல்லூரி காதலன் சந்தோஷ், உடந்தையாக இருந்த லோகேஷ் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

பள்ளி, கல்லூரி மாணவிகளை ஒரே நேரத்தில் கரெக்ட் செய்த இளைஞர்! கை குழந்தைகளுடன் 2 பேரும் கதறல்! இறுதியில் நடந்த ட்விஸ்ட்!
இதற்காக தான் கார் டிரைவர் ஹரீஷை கூலிப்படை ஏவி கொன்றேன்! மஞ்சுளாவின் சினிமாவை மிஞ்சிய பரபரப்பு வாக்குமூலம்!