நான் யாரையும் காபி சாப்பிட கூப்பிடல.. அவர் இதை நிரூபித்தால் பாஜகவை விட்டு விலகுறேன்.. நடிகை விஜயலட்சுமி.

By Ezhilarasan BabuFirst Published Aug 6, 2022, 12:19 PM IST
Highlights

நான் மோசடி செய்ததை சினேகன் நிரூபித்தால் பாஜகவை விட்டு விலக தயார் என சின்னத்திரை நடிகை ஜெயலட்சுமி கூறியுள்ளார்.
தான் நிர்வகித்து வரும் சினேகம் என்ற அறக்கட்டளையை பெயரை தவறாக பயன்படுத்தி நடிகை ஜெயலட்சுமி நிதி வசூலித்து மோசடி செய்து வருவதாக சினேகன்  குற்றச்சாட்டு வைத்துள்ள நிலையில் ஜெயலட்சுமி இவ்வாறு கூறியுள்ளார்.

நான் மோசடி செய்ததை சினேகன் நிரூபித்தால் பாஜகவை விட்டு விலக தயார் என சின்னத்திரை நடிகை ஜெயலட்சுமி கூறியுள்ளார்.
தான் நிர்வகித்து வரும் சினேகம் என்ற அறக்கட்டளையை பெயரை தவறாக பயன்படுத்தி நடிகை ஜெயலட்சுமி நிதி வசூலித்து மோசடி செய்து வருவதாக சினேகன்  குற்றச்சாட்டு வைத்துள்ள நிலையில் ஜெயலட்சுமி இவ்வாறு கூறியுள்ளார்.

பிரபல சினிமா பாடலாசிரியர் சினேகன், இவர் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து வருகிறார். நேற்று சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பாஜகவை சேர்ந்த நடிகை ஜெயலட்சுமி மீது பரபரப்பு புகார் என்று தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், கடந்த 2015ஆம் ஆண்டு சினேகம் பவுண்டேசன் என்ற பெயரில் தான் அறக்கட்டளை ஒன்று நடத்தி வருவதாகவும், அந்த அறக்கட்டளை மூலம் பலருக்கு பல உதவிகளை செய்து  வருவதாகவும், ஆனால் சமீப காலமாக இணைய தளத்தில் தனது பவுண்டேஷன் பெயரை தவறாக பயன்படுத்தி சிலர் பண வசூலில் ஈடுபட்டு வருவதாகவும், இது தொடர்பாக வருமான வரித் துறையிடம் இருந்து தனக்கு தகவல் வந்தது என்றும் அவர் கூறினார்.

இதுதொடர்பாக விசாரித்ததில், சினேகம் பவுண்டேஷன் என்ற பெயரை தவறாக பயன்படுத்தி, பாஜக பிரமுகரும் நடிகருமான ஜெயலட்சுமி பண மோசடியில் ஈடுபட்டு வருவது தெரிந்தது, இதனால் தனது வழக்கறிஞர் மூலமாக ஜெயலட்சுமிக்கு நோட்டீஸ் அனுப்பியதாகவும், ஆனால் விலாசம் தவறாக இருப்பதால் அது திரும்பி வந்து விட்டது என்றும் கூறியுள்ளார்.

இதையும் படியுங்கள்: பள்ளி வகுப்பறையில் மாணவன், மாணவி தற்கொலை முயற்சி.. என்ன காரணம் தெரியுமா? வெளியான அதிர்ச்சி தகவல்.!

ஜெயலட்சுமியை செல்போனில் தொடர்பு கொண்டபோது, நேரில் வாங்க சமாதானம் பேசிக் கொள்ளலாம், ஒரு காப்பி சாப்பிடலாம் வாங்க என அழைப்பதாகவும் சினேகன் ஜெயலட்சுமி மீது புகார் கூறியுள்ளார். தனது சொந்த செலவில் தொண்டு நிறுவனம் நடத்தி வருவதாக கூறிய சினேகன் தனது பெயரை பயன்படுத்தி போலி தொண்டு நிறுவனம் நடத்தி வரும் ஜெயலட்சுமி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

இந்நிலையில் இது குறித்து தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு தொலைபேசி வாயிலாக விளக்கம் கொடுத்துள்ள நடிகை ஜெயலட்சுமி, ஏதோ ஒரு அரசியல் நோக்கத்திற்காக தன் மீது சினேகன் இந்த குற்றச்சாட்டை வைக்கிறார் என கூறியுள்ளார். மேலும் அவர் கூறியிருப்பதாவது:- ஐயோ கடவுளே இது வேறயா..? அவருடைய பெயரை வைத்து நான் ஏன் மோசடி செய்ய போகிறேன்.

இதையும் படியுங்கள்: திருமணம் ஆனதை மறைத்து இளம் பெண்ணுடன் லிவிங் டுகெதர்..இஸ்டத்துக்கு உல்லாசம். இறுதியில் நடந்த பயங்கரம்.

அவர் சினேகம் என்ற பெயர் வைத்திருக்கிறார் என்று எனக்கு இப்போதுதான் தெரியும். உங்கள் மூலமாகத்தான் இது எனக்கு தெரியும், இதுவரை சினேகனிடம் நான் பேசியதே கிடையாது. ஒரே ஒருமுறை ஒரு நிகழ்ச்சியில் பார்த்தேன். அப்போது வணக்கம் சொன்னதாக நினைவிருக்கிறது. நானும் ஒரு பவுண்டேஷன் நடத்திக் கொண்டிருக்கிறேன் அதன் பெயரும் சினேகம் தான்.

அவருடைய பெயரில் நான் அறக்கட்டளை ஆரம்பிக்க வேண்டுமென்று எனக்கு அவசியமில்லை, அவர் அவ்வளவு பெரிய ஆளுமில்லை, என்னது நான் சினேகனை காப்பி சாப்பிட கூப்பிட்டேனா? நான் இதுவரை யாரையும் காப்பி சாப்பிட வாங்க, டீ சாப்பிடலாம் வாங்க, ஆபீசுக்கு வாங்க என்று கூப்பிட்டதே கிடையாது, காபி சாப்பிட போகிற பழக்கம் எனக்கு இல்லை, கட்டப்பஞ்சாயத்து செய்வது இல்லை, அரசியலுக்காக தவறான செயல்களில் ஈடுபடுவது போன்ற எந்த செயலிலும் நான் ஈடுபடுவதில்லை, சினேகன் என்ற பெயரில் நானும் அறக்கட்டளை வைத்திருக்கிறேன்.

உனது அறக்கட்டளைக்கு லட்சக்கணக்கில் வெளிநாட்டில் இருந்து பணம் வருவதில்லை, லட்சக்கணக்கில் பணம் புரள்வதும் இல்லை, என்னுடைய அறக்கட்டளை கணக்கில் ஐடியில் பிரச்சனை வர அளவிற்கு டிரான்ஸ்செக்ஷன் இல்லை, ஒருவேளை நான் சினேகம் என்ற பெயரை தவறாக பயன்படுத்தி மோசடி செய்தேன் என்பதை சிறிய அளவில் நிரூபித்தால் கூட நான் பாஜகவின் விட்டு விலக தயாராக இருக்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்
 

click me!