“உங்க பொண்ணுக்கு தோஷம் இருக்கு, நான் பாத்துக்குறேன்..” காமவெறி பிடித்த சாமியாருக்கு விழுந்த தர்மஅடி

Published : Aug 05, 2022, 08:58 PM IST
“உங்க பொண்ணுக்கு தோஷம் இருக்கு, நான் பாத்துக்குறேன்..” காமவெறி பிடித்த சாமியாருக்கு விழுந்த தர்மஅடி

சுருக்கம்

தோஷம் கழிப்பதாக கூறி பல்வேறு மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார் சாமியார். 

சென்னை மதுரவாயல் பகுதியை சேர்ந்த தம்பதிகளின் 18 வயது மகள் 11 ஆம் வகுப்பு படித்து வருகிறார். மாணவி கடந்த 2018-ம் ஆண்டு மதுரவாயல் கந்தசாமி நகரில் உள்ள கங்கையம்மன் கோவிலுக்கு பெற்றோருடன் சாமி கும்பிட சென்றார். அப்போது கோவில் பூசாரியான சந்திரசேகர் (55) மாணவிக்கு சுற்றி போட்டார். பின்னர் தோஷங்கள் நிறைய உள்ளது.

மேலும் செய்திகளுக்கு..அடிப்படை வசதி கூட இல்லை..படிப்பை கைவிடாத மாணவி - டீக்கடைக்காரர் மகள் டிஎஸ்பி ஆன கதை !

ஆகவே 15 நாட்கள் இங்கேயே தங்கி பரிகார பூஜை செய்தால் உங்கள் மகளுக்கு நல்ல பலன் கிடைக்கும் என்று மாணவியின் பெற்றோரிடம் பூசாரி சந்திரசேகர் கூறினார். இதையடுத்து மாணவி தனது தாயுடன் அங்கேயே தங்கி பரிகாரங்கள், பூஜை முடிந்து வீடு திரும்பினார். இந்த நிலையில் கடந்த வாரம் வேறு ஒரு சிறுமியிடம் பூஜை செய்வது போல பூசாரி சந்திரசேகர் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டு தவறாக நடந்தது ஏற்கனவே பரிகாரம் செய்து திரும்பிய மாணவியின் தந்தைக்கு தெரியவந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் தனது மகளிடம் சென்று பூசாரியை பற்றி விசாரித்தார். அப்போது பரிகாரம் செய்வது போல தன்னிடமும் சந்திரசேகர் பலமுறை தவறாக நடந்து கொண்டார். மேலும் இதுபற்றி நீ வெளியே கூறினால் பரிகார பூஜைக்கான முழுமையான பலன் கிடைக்காது வேறு மாதிரி கெட்ட காரியங்கள் ஏதாவது நடந்துவிடும் என்றும் கூறி தனக்கு மிரட்டல் விடுத்ததாகவும் அவர் கூறினார். தனது மகளிடம் பரிகார பூஜை என்ற பெயரில் பாலியல் ரீதியாக அத்துமீறலில் ஈடுபட்டது தெரிந்து மாணவியின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.

மேலும் செய்திகளுக்கு..அடிப்படை வசதி கூட இல்லை..படிப்பை கைவிடாத மாணவி - டீக்கடைக்காரர் மகள் டிஎஸ்பி ஆன கதை !

இந்த நிலையில் மாணவியின் தந்தை நேற்று மாலை அந்த கோவிலுக்கு சென்றார். அப்போது அங்குள்ள அறையில் பூசாரி சந்திரசேகர் பரிகார பூஜை செய்வது போல வேறு ஒரு சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதை நேரில் கண்டார். இதனால் ஆத்திரமடைந்த அவர் சந்திரசேகரை சரமாரியாக அடித்து உதைத்தார். இதில் காயமடைந்த சந்திரசேகர் விருகம்பாக்கத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இந்த நிலையில் பரிகார பூஜை என்று கூறி பூசாரி சந்திரசேகர் தொடர்ந்து பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு வருகிறார். ஆகவே அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாணவியின் தாய் திருமங்கலம் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து போக்சோ உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். இதை அறிந்த சந்திரசேகர் ஆஸ்பத்திரியில் இருந்து தப்பி ஓடிவிட்டார். அவரை பிடிக்க போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகளுக்கு..ஆகஸ்ட் 10 பள்ளி & கல்லூரிகளுக்கு விடுமுறை.. வெளியான அதிரடி உத்தரவு !

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Sathankulam Case: இந்தியாவையே உலுக்கிய தீர்ப்பு! 9 போலீசாருக்கு மரண தண்டனை.. நடந்தது என்ன?
பயங்கரவாத தாக்குதல் நடத்த சதி... லஷ்கர்-இ-தொய்பா பயங்கர ஸ்கெட்ச்..! டெல்லியில் பரபரப்பு..!