
சொகுசு காரில் வைத்து சிறுமி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் தற்போது எம்எல்ஏவின் மகன் கைது செய்யப்பட்டுள்ளார்.
தெலங்கானா மாநிலம் ஐதராபாத் ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் பிரபல மதுபான பப் செயல்பட்டு வருகிறது. இங்கு கடந்த மே 28ம் தேதி 17 வயதுடைய சிறுமி பார்ட்டியை முடித்துக்கொண்டு சாலையில் சென்றுக்கொண்டிருந்த சிறுமியை வலுக்கட்டாயமாக சொகுசு காரில் ஏற்றிக்கொண்டு 2 மணி நேரம் சாலைகளில் சுற்றியபடி அந்த பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு இறக்கிவிட்டு சென்றனர்.
இதையும் படிங்க;- பள்ளி நிர்வாகமே இப்படி செய்யலாமா? சிறுமி கூட்டு பலாத்காரத்தில் திடுக்கிடும் தகவல் அம்பலம்..!
இதனையடுத்து, சிறுமி நடந்த சம்பவத்தை கூறி தந்தையிடம் கதறி அழுதுள்ளார். இதனால், அதிர்ச்சியடைந்த தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில், பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டவர் 18 வயதுக்கும் குறைவான சிறுவர்கள் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 5 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த பலாத்கார விவகாரத்தில் எம்எல்ஏ மகனுக்கு தொடர்பு இருப்பதாக தகவல் வெளியாகி இருந்தன.
இந்நிலையில், அனைத்து இந்திய மஜ்லிக் இதிஹாத் உல் முஸ்லிமின் கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ-வின் மகன் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கைது செய்யப்பட்ட எம்.எல்.ஏ-வின் மகன் மைனர் என்பது தெரியவந்துள்ளது. சிறுமி பலாத்கார வழக்கில் இதுவரை 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க;- Hyderabad Gang Rape case : ஐதராபாத் சிறுமி கூட்டு பலாத்கார வழக்கில் தடயங்கள் சேகரிப்பு